சென்னை: ஸ்மார்ட்போன்களில் ஆப்பிளின் ஐபோனுக்கு இணையாக சாம்சங் நிறுவன போன்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு கிடைக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா போன்.
கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா போன் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் 1.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ் 24 அல்ட்ராவில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களும் எஸ் 23 அல்ட்ராவிலும் கிடைக்கிறது.

குவால்காம் ஸ்னேப்டிராகன் 8 ஜெனரேஷன் சிப், 6.8 இன்ச் டிஸ்பிளே என பல நவீன அம்சங்களை கொண்டது. நல்ல ஸ்மார்ட்போன் அனுபவத்தை தரும் வகையில் குறிப்பாக படங்கள், வீடியோக்களை காண மிகச்சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் , 12 மெகாபிக்சல் , 10 மெகாபிக்சல் என கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
செல்ஃபி கேமரா 12 மெகாபிக்சல் ஆகும். இதனால் சிறந்த முறையில் வீடியோ மற்றும் படங்களை எடுக்கலாம்.5,000mAh பேட்டரி கொண்டிருக்கும் போன், மேலும் 45வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15வாட் வையர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், விலை அதிகமாக இருந்ததால் வாங்குவதில் சற்றே தயக்கம் இருந்தது.ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் 42,000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் 40% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை தற்போது 89,999 ரூபாய்க்கு வாங்கலாம். 1.24 லட்சம் ரூபாயில் போனை தவறவிட்டவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
42,000 ரூபாய் தள்ளுபடி மட்டுமின்றி, கூடுதலாக பல தள்ளுபடிகளும் பிளிப்கார்ட்டில் கிடைக்கின்றன. ஆக்சிஸ் பேங்க், ஹெச்எஸ்பிசி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளின் அட்டைகளை பயன்படுத்தினால் 1,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சலுகை பெறலாம்.
அதே போல அமேசான் தளத்திலும் 39% தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா போன் கிடைக்கிறது. 90,999 ரூபாய்க்கு அமேசானில் இந்த போனை வாங்கலாம். கூடுதலாக அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 4,678 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் பிற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications