உலகின் முன்னணி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங் இந்தப் பணிநீக்க காலத்திலும் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், சேவை மேம்பாட்டுக்காவும் இந்தியாவில் இருந்து சுமார் 1000 இன்ஜினியரிங் பட்டதாரிகளைச் சாம்சங் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரிவில் சேர்க்க உள்ளது.
இந்தியா
உலகில் பல நிறுவனங்கள் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைத்து வருவது போல் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் தற்போது டெக் ஹப் மற்றும் R&D ஹப்-ஐ இந்தியாவில் அமைக்கத் துவங்கியுள்ளது. இதில் முக்கியமாகச் சாங்சங் உள்ளது.
பணிநீக்கம்
சர்வதேச நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் சாம்சங் இந்தியாவில் புதிதாக ஊழியர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
1000 இன்ஜினியரிங் பட்டதாரிகள்
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 1000 இன்ஜினியரிங் பட்டதாரிகளைத் தேர்வு செய்து பெங்களூர், நொய்டா, டெல்லியில் இருக்கும் சாம்சங் R&D சென்டரிலும், பெங்களூரில் இருக்கும் சாம்சங் செமிகண்டக்டர் இந்தியா ரிசர்ச் சென்டரிலும் பணியில் அமர்த்த உள்ளது.
முக்கியத் தொழில்நுட்பம்
இந்த 1000 இன்ஜினியரிங் பட்டதாரிகளும் 2023 ஆம் ஆண்டில் பணியில் சேர உள்ளதாகவும், இவர்கள் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டீப் லேர்னிங், இமேஜி பிராசசிங், IoT, கனெக்டிவிட்டி, கிளவுட், பிக் டேட்டா, பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ், ப்ரெட்டிவ் அனலிசிஸ், கம்யூனிகேஷ்ன் நெட்வொர்க்ஸ், சிஸ்டம் ஆன் ஏ சிப் (SOC), ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் ஆகிய தொழில்நுட்பத்தில் பணியாற்ற உள்ளனர் எனச் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்வி பிரிவுகள்
இதற்காகச் சாம்சங் கம்பியூட்டர் சையின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எம்மெடெட் சிஸ்டம்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் நெட்வொர்க்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து மாணவர்களைச் சேர்க்க உள்ளது.
சாம்சங் R&D சென்டர்
இந்த hiring seasonல், சாம்சங் R&D சென்டர்களில் ஐஐடி மெட்ராஸ், ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாம்பே, ஐஐடி ரூர்க்கி, ஐஐடி காரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி குவஹாத்தி மற்றும் ஐஐடி பிஹூ போன்ற ஐஐடி கல்லூரிகளில் இருந்து சுமார் 200 இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்த உள்ளது.
400 பேர் ரெடி
சாம்சங் நிறுவனம் இதற்காக ஏற்கனவே ஐஐடி மற்றும் பிற முக்கியக் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு 400க்கும் மேற்பட்டோருக்கு முன் வேலை வாய்ப்பு சலுகைகளை (Pre Placement Offers ) வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
7500 காப்புரிமை
இந்தியாவில் உள்ள சாம்சங் ஆராய்ச்சி மையங்கள் மல்டி-கேமரா சொல்யூஷன்ஸ், டிவி, டிஜிட்டல் அப்ளிகேஷன்ஸ், 5ஜி, 6ஜி மற்றும் அல்ட்ரா-வைட்பேண்ட் வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் புரோட்டோகால் போன்ற பிரிவுகளில் சுமார் 7,500 காப்புரிமைகளைத் தாக்கல் செய்துள்ளன.
IBM அறிவிப்பு
சாம்சங் போலவே உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் நேரத்தில் உலகின் மிகவும் பழமையான டெக் சேவை நிறுவனமான IBM சுமார் 5,00,000 ஊழியர்களை அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் தேர்வு செய்து சைபர்செக்யூரிட்டி பிரிவில் பயிற்சி அளித்து வல்லுனர்களாக மாற்ற உள்ளதாக ஐபிஎம் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎம் வளர்ச்சி
ஐபிஎம் வளர்ச்சிக்கு இந்தியா மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கும் நிலையில் தனது முக்கியமான வளர்ச்சி திட்ட பிரிவான சைபர்செக்யூரிட்டி சேவைக்கு இந்தியாவைச் சென்டராக மாற்றியுள்ளது.
சைபர்செக்கியூரிட்டி
இது மட்டும் அல்லாமல் ஐபிஎம் நிறுவனத்தின் பல முக்கிய மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி ப்ராடெக்ட்ஸ் இந்தியாவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டதால் ஐபிஎம் தனது சைபர்செக்கியூரிட்டி தளத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications