கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மோசமான லாபத்தைப் பதிவு செய்துள்ள தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத சாம்சங் நிர்வாகம் அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது.
சாம்சங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இனி தனது நிர்வாக அதிகாரிகளுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஐந்து நாள் வேலை வார முறையிலிருந்து ஆறு நாள் வேலை வார முறைக்கு மாற்றம் செய்வதன் மூலம் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பிரச்சனையின் வீரியத்தை உணர்த்த முயற்சி செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தில் பணிகள் வேகமெடுக்கும் என்றும், லாபத்தையும், வருவாய் அதிகரிக்க முடியும் என சாம்சங் நம்புகிறது என கொரியா எகனாமிக் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் குழுமத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள நிர்வாகிகளுக்கும் இந்த ஆறு நாள் வேலை முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் சில பிரிவுகளில் சில நிர்வாகிகள் இந்த வாரத்திலேயே ஆறாவது வேலை நாளை துவங்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நிர்வாக அதிகாரிகள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுத்து பணியாற்றத் தொடங்கலாம் எனவும் சாம்சங் தளர்வு அளித்துள்ளது.
"சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உட்பட எங்கள் முக்கிய பிரிவுகளின் செயல்திறன் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. இந்த நெருக்கடியைக் கடப்பதற்காகவும், அதிக முயற்சி எடுப்பதற்காகவும் நிர்வாகிகளுக்கு ஆறு நாள் வேலை வார முறையை அறிமுகப்படுத்துகிறோம்" என்று சாம்சங் குழுமம் தெரிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவனம் தற்போது "அவரச நிலை"யில் இயங்கி வருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எரிவாயு விலை உயர்வு, அதிக கடன் செலவுகள் மற்றும் புவிசார் அரசியல் காரணிகள் ஆகியவற்றால் சாம்சங் நிறுவனத்தின் கடந்த காலாண்டின் லாபம் 73% சரிவு கண்டுள்ளது. கடந்த ஆண்டு இயக்க லாபம் 85% சரிந்தது, இது 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு சாம்சங் நிறுவனத்திற்கு மிக மோசமான ஆண்டாகும்.
தொழில்நுட்ப பிரிவில் இந்த புதிய வேலை அட்டவணை உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications