சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், சமீபத்தில் நடந்த சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (SIWU) 37 நாள் ஸ்ட்ரைக் காரணமாக 100 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று தெரிவித்தது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக், இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்போது முடிவுக்கு வந்தது. இதில் மாநில உயர் அதிகாரிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஏராளமான வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல இடங்களில் இருக்கும் சாம்சங் நிறுவனங்களில் பெருவாரியான தயாரிப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது.

இதனால் இந்த நிறுவனத்திற்கு பல மில்லியன் வருமானம் கிடைக்கிறது. ஆனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்காமல் அதிக நேரம் வேலை வாங்குவதாக கூறி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் ஸ்ட்ரைக்கை அறிவித்தது. அதுமட்டுமின்றி சில ஊழியர்கள் கூடுதல் நேரம் பணி புரிவதாகவும், விடுமுறை எடுக்க படாத பாடு படுவதாகவும் தெரிவித்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி "சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்" என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதன் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தங்களுடைய செய்வதன் மூலம் தங்களுடைய தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு தொழிற்சங்கத்தை பதிவு செய்து அங்கீகரிக்கும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அங்குள்ள ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது
அப்போது, சங்கத்தை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சாம்சங் தரப்பு, தொழிலாளர் சங்கத்திற்கு அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதால் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களது நிறுவன பெயரை சேர்க்காமல் சங்கத்தை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. மேலும், தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டத்தால் நிறுவனத்திற்கு 845 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி R.N மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாம்சங் நிறுவனம் தரப்பில் ஜி. ராஜகோபாலன் வாதிட்டார். அரசியல் ரீதியிலான தலையீடு இருக்கக் கூடாது என்றும்., தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்தால் தங்களுக்கு இந்திய மதிப்புக்கு 840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் பெயரை சேர்க்காமல் தொழிற்சங்கம் தொடங்கிக் கொள்ள தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் வாதிட்டார்.
அப்போது தொழிலாளர்களின் சார்பாக ஆஜரான பிரசாத் என்ற வழக்கறிஞர் தொழிற்சங்க சட்டத்தின்படி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை என்று வாதிட்டார். கொரியாவிலும் சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் இருக்கிறது. அதேபோல பல நிறுவனங்களும் தங்கள் பெயரில் தொழிற்சங்கங்களை இயக்கி வருகின்றன என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனுவின் விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications