இந்தியா, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தை. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள். 4g மற்றும் 5g இணைப்புகள் வருகை, இன்ஸ்டாகிராம் , யூடியூப் போன்ற செயலிகளின் வருகையால் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தையே பெரிய மாற்றம் கண்டு இருக்கிறது.
ஒரு காலத்தில் பட்டன் போன் தான் எனக்கு சௌகரியம் என கூறி வந்த பெரியவர்கள் கூட தற்போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தவே விரும்புகிறார்கள். ஏனெனில் ஸ்மார்ட் ஃபோன்களில் whatsapp உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து எளிதாக மற்றவர்களோடு நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. அதே வேளையில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த முடிகிறது.

பட்டன் போன்களை விட இவை பயன்படுத்த எளிமையாக மாறி இருக்கின்றன. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன் புரட்சிக்கு வித்திட்ட நிறுவனங்களில் மிக முக்கியமானது சாம்சங். தற்போது இந்திய சந்தையில் ரெட் மீ போன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் ஒரு காலத்தில் சாம்சங் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இப்போதும் சாம்சங் போனுக்கு என தனி ரசிகர்கள் உண்டு. சாம்சங் நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு புது புது மாடல் போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.
இப்படி நாமெல்லாம் 24 மணி நேரமும் போனும் கையுமாக தான் சுற்றி கொண்டிருக்கிறோம். போனையும் நம்மையும் பிரிக்கவே முடியாது என்ற நிலை ஆகிவிட்டது. வேலை ரீதியாகவும் இந்த ஸ்மார்ட் போன்கள் நமக்கு மிக முக்கியமான கருவிகளாக இருக்கின்றன. பல்வேறு நபர்களுக்கு தங்களுடைய தொழிலை மேம்படுத்தவும் இந்த ஸ்மார்ட் போன்கள் அதில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்களும் தான் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு கிடையாது.
அதே வேளையில் இந்த ஸ்மார்ட் போன் பலரை அடிமையாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துகிறார்கள். இப்படி நாமெல்லாம் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருக்கும் நிலையில் இதற்கு வித்திட்ட சாம்சங் நிறுவனத்தின், பேரன் மூன்று ஆண்டுகளாக தான் ஸ்மார்ட் போனை பயன்படுத்தவில்லை எனக் கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ மறைந்ததை அடுத்து அவரது மகன் லீ பூன் ஜி தான் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகனும் வருங்கால சாம்சங் நிறுவன முதலாளியுமான லிம் டாங் ஹியூன் தற்போது தென்கொரியாவின் சீயோல் தேசிய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த பல்கலைகழகத்தில் சேர நுழைவு தேர்வு நடக்கும். இதில் தேர்ச்சி பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த போட்டி தேர்வு உலகிலேயே கடுமையான தேர்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிம் டாங், இந்த பல்கலைக்கழக போட்டி தேர்வுக்காக தான் மூன்றாண்டு காலம் செல்போனையே தொடவில்லை எனக் கூறியிருக்கிறார்.
3 ஆண்டுகள் போனே பயன்படுத்தாமல் படித்தேன், போன் பயன்படுத்தாததால் தான் என்னுடைய கவனம் சிதறாமல் படிக்க முடிந்தது என கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications