இந்திய வர்த்தக சந்தைக்கு இது மிகவும் முக்கியமான காலகட்டமாகும், அடுத்த 4 மாதங்களுக்கு நாடு முழுவதும் அடுத்தடுத்து பல பண்டிகை கொண்டாடப்படும் காரணத்தால் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தனது பொருட்களை அதிகப்படியான தள்ளுபடியில் விற்று பெரும் வருமானத்தைப் பார்க்கும் காலகட்டமாகும். இந்த சூழ்நிலையில் சாம்சாங் அடுத்தடுத்து பல பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது.
கொரிய நாட்டின் நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இந்திய வர்த்தகத்தில் சுமார் 200 நிர்வாக அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னை தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், தற்போது நிர்வாக பிரிவில் இருக்கும் 200 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்தியச் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மந்தநிலை உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் சாம்சங் தயாரிப்புகளுக்கு போதுமான டிமாண்ட் இல்லாத காரணத்தால் இதன் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டு சந்தை பங்கீட்டை இழந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாம்சங் நிறுவனத்திற்கு அதிகப்படியான லாபத்தைத் தரும் ஸ்மார்ட்போன் சந்தையில் வர்த்தகத்தை இழந்து வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற முடிவில் சாம்சங் தனது இந்திய வர்த்தகத்தில் பணியாற்றும் 200 நிர்வாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து லாபத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்படப் போவது ஸ்மார்ட்போன், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்சஸ், சப்போர்ட் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் தான். சாம்சங் இந்திய நிர்வாகத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றி வரும் வேளையில் இந்த பணிநீக்கம் மூலம் 9 - 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர்.
இதேவேளையில் சாம்சங்-ன் சென்னை தொழிற்சாலையில் 3வது நாளாக இன்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக இத்தொழிற்சாலையில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறக்கூடிய இந்த பண்டிகை காலத்தில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொய்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் சாம்சங் தனது டெலிவிஷன் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் பிரிவுகளை ஒன்றாக இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாகவும் தற்போது பணிநீக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இந்த பணிநீக்கம் மூலம் நிர்வாகம் திறம்பட மேம்படுத்தப்பட்டு நிர்வாக முடிவுகள் வேகப்படுத்தப்படும் என சாம்சங் நம்புகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சாம்சங் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தராததால், தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து சாம்சங் ஊழியர்களால் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், பல நூறு தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து, நிறுவன நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வரும் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications