தென்கொரிய நிறுவனமான சாம்சங் தனது அமெரிக்க வர்த்தக பிரிவில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையை செய்துள்ளது. சாம்சங் அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் நியூ ஜெர்சியில் தனது அலுவலகங்களை வைத்துள்ளது.
அமெரிக்காவின் டிஸ்பிளே, போன் மற்றும் இதர கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரிவில் இருக்கும் அதிகாரிகளை பெரிய அளவில் பணிநீக்கம் செய்துள்ளது.

இதுக்குறித்து சாம்சங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூ ஜெர்சியில் இருக்கும் பணிபுரிந்த 739 பேர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பணியாற்றியவர்கள், ஆனால் சிப் பிரிவில் பணியாற்றிய யாரும் இதுவரையில் பணிநீக்கம் செய்யப்படவில்லை.
மேலும் இந்த பணிநீக்கம் சாம்சங் தலைமையகத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றும் திட்டம் காரணத்திற்காகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு டெக்சாஸ் அலுவலகத்திற்கு மாற வாய்ப்பு அளிக்கப்பட்டது, இதை ஏற்றுகொண்டவர்கள் பணியில் தொடர்கின்றனர். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் டெக்சாஸ் அலுவலகத்தில் மொபைல் பிரிவில் பணியாற்றிய 100க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சாம்சங் நிறுவனத்தின் சிப் வர்த்தகம் பெரிய அளவில் லாபத்தை சந்தித்து வருகிறது, ஆனால் பிற பிரிவுகள் எதிர்பார்த்த லாபத்தை பெறவில்லை.
இதேவேளையில் தலைமை அலுவலகம் வரி, செலவுகள் காரணமாக நியூ ஜெர்சியில் இருந்து டெக்சாஸ்-க்கு மாறும் காரணத்தால் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சாம்சங் நிறுவனத்தின் அமெரிக்க அலுவலகத்தில் சுமார் 1200 பேர் பணியாற்றி வருகின்றனர், இதில் பணிநீக்கம் செய்யப்படும் சில ஊழியர்களுக்கு ஜூன் 30ஆம் தேதியே இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த 10-20 நாட்களில் மற்ற ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிநீக்கத்தில் 30க்கும் அதிகமான மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் டெக்சாஸ் மாநிலத்திற்கு தனது தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கு திட்டம் தீட்டி வருகிறது.
ஏற்கனவே டெஸ்லா போன்ற பல பெரிய நிறுவனங்கள் மாறியுள்ள நிலையில் தற்போது இப்பட்டியலில் சாம்சங்-ம் சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications