சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக்கப்படவில்லை என்றும், அதை கைபேசிகளில் நிறுவுவதும் நீக்குவதும் பயனர்களின் விருப்பம் என்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார். அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற அரசாங்கம் உத்தரவு பிறப்பித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அனைத்து புதிய ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதாகவும் பயனர்கள் டெலிட் செய்ய முடியாத வகையில் நிறுவ வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சஞ்சார் சாத்தி செயலி பயனர்களால் நீக்கப்படலாம் என அமைச்சர் சிந்தியா விளக்கமளித்தார். இந்தச் செயலி கட்டாயமில்லை, விருப்பத்தேர்வே என அவர் கூறியுள்ளார்.

"இந்த செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது எங்களது கடமை. அதை தங்கள் சாதனங்களில் வைத்திருப்பதும், நீக்குவதும் பயனரின் விருப்பத்தைப் பொறுத்தது," என்று அவர் கூறினார். அரசின் தரப்பில், சஞ்சார் சாத்தி செயலி, சந்தையில் விற்கப்படும் கைபேசிகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட கைபேசிகளைக் கண்காணிக்கவும் உதவும் ஒரு கருவியாகப் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், தனியுரிமை ஆர்வலர்களும், காங்கிரஸ் தலைமையிலான அரசியல் எதிர்க்கட்சிகளும் இதை குடிமக்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் "பிக் பிரதர்" போன்ற ஒரு நடவடிக்கை என்று கடுமையாக விமர்சித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் அனைத்து பிற நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு சஞ்சார் சாத்தி பிரச்சனையை விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி ஒத்திவைப்பு தீர்மான அறிவிப்பை தாக்கல் செய்தார். அரசு, இந்த செயலியின் அவசியத்தை வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் அதன் பரந்த பயன்பாடு குறித்த அச்சங்களை எழுப்பின.
ரேணுகா சவுத்ரியின் கேள்விக்கு பதிலளித்த ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) எம்.பி. சஷாங்க் மணி திரிபாதி, தொலைத்தொடர்புத் துறையின் (DoT) நடவடிக்கையை ஆதரித்துப் பேசினார். "நான் ஐ.ஐ.டி-யில் படித்தவன், நடக்கும் சைபர் தாக்குதலின் வகைகளை நான் புரிந்துகொள்கிறேன். இந்தத் தொலைத்தொடர்பு செயலி மக்களின் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும். நமது தரவுகள் வெளியேறாது, குடிமக்களின் பாதுகாப்பிற்காக உறுதி செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு அம்சமும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். இதை நான் வரவேற்கிறேன்," என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் திரிபாதி தெரிவித்தார்.
சஞ்சார் சாத்தி செயலி மற்றும் போர்ட்டலைப் பயன்படுத்தி 2023 முதல், தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட 26 லட்சத்திற்கும் அதிகமான கைபேசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதன் இணையதளத்தில் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. சந்தேகத்திற்கிடமான மோசடி அல்லது விரும்பத்தகாத வணிகத் தொடர்புகள் மற்றும் தீங்கிழைக்கும் வலை இணைப்புகளைப் புகார் அளித்தல், தொலைந்துபோன கைபேசியைக் கண்டறிந்து பிளாக் செய்தல் மற்றும் உங்கள் பெயரில் உள்ள அனைத்து கைபேசி இணைப்புகளையும் கண்டறிதல் ஆகியவை இந்த செயலியின் முக்கிய செயல்பட்டுகளாகும்.
சமீபகாலமாக அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நின்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூட, ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற செயலிகள் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயமாக்குவது "கவலைக்குரியது" எனத் தெரிவித்தார். "அரசாங்கத்தின் தர்க்கரீதியான காரணத்தை நான் மேலும் ஆராய வேண்டும். வெறும் ஊடக அறிக்கைகள் மூலம் உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விட, அரசாங்கம் எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்," என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர் கூறினார்.
அரசியல் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய "பிரச்சனைகளை உருவாக்குகின்றன" என்று குற்றம் சாட்டினார். "அனைத்து பிரச்சினைகளும் அதன் முக்கியத்துவத்திற்குரியவை, ஆனால் அவற்றை நாடாளுமன்றத்தை முடக்குவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்துவது சரியல்ல. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். நான் ஏற்கனவே அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்களின் பிரச்சனைகளை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் நாட்டில் ஒன்று மட்டுமல்ல, பல பிரச்சினைகள் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications