மொபைல் போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் எழுந்த பரவலான விமர்சனங்களுக்குப் பிறகு, புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து மக்களவையில் பேசிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சஞ்சார் சாத்தி பாதுகாப்பு செயலி மூலம் ஒட்டுக்கேட்பு சாத்தியமில்லை எனவும், அது நிகழாது எனவும் உறுதியளித்தார்.

மேலும் கட்டாயப் பதிவிறக்கம் செய்யும் அறிவிப்பை நீக்கும் முடிவுக்கு வர காரணமாக இருந்தது, ஒரே நாளில் விருப்பத்தின் பேரில் செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்ததே என தொலைத்தொடர்புத் துறை (DoT) தெரிவித்துள்ளது.
சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்பது இந்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்திய ஒரு முக்கியமான மொபைல் ஆப் மற்றும் இணையதள சேவை ஆகும். இதன் மூலம் உங்கள் போன் திருடப்பட்டால் உடனடியாக ப்ளாக் செய்யலாம், உங்கள் பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் உள்ளன என்பதைச் சரிபார்க்கலாம், மோசடி அழைப்புகள் அல்லது மோசடி செய்திகளைப் புகாரளிக்கலாம். இது சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ள பாதுகாப்பு கருவியாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
நவம்பர் 28 உத்தரவு:
இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து மொபைல் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப் சஞ்சார் சாதியை முன்கூட்டியே (ப்ரீ-இன்ஸ்டால்) நிறுவ வேண்டும். 90 நாட்களுக்குள் செய்து முடிக்கவும், 120 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் என்று கூறியது. இது தனியுரிமை மீறல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. சிலர் 2022-ல் புயலை ஏற்படுத்திய பெகாசஸ் உளவு மென்பொருளோடு ஒப்பிட்டனர் - அரசியல் எதிரிகளை கண்காணிக்க பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது.
பெரும் எதிர்ப்பும், அரசு உளவு பார்ப்பதாக அச்சமும் நிலவும் நிலையில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை கொடுத்த விளக்கத்தில் சஞ்சார் சாதி ஆப்பை ஆக்டிவேட் செய்வது விருப்பமானது, யாரும் நினைத்தால் டெலீட் செய்யலாம் என்று அறிவித்தார்.
புதன் கிழமை வெளியிட்ட மத்திய அரசு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், முந்தைய உத்தரவை ரத்துவதாகவும், போன் உற்பத்தியாளர்களுக்கு சஞ்சார் சாதி ஆப்பை கட்டாயமாக நிறுவ வேண்டியது இல்லை. பயனர்கள் தனிப்பட்ட தேர்வுக்கு ஏற்ப பயன்படுத்தலாம் என அறிவித்தது. இது மத்திய அரசின் பெரிய யூடர்ன் ஆக பார்க்கப்படுகிறது.
இன்று தொலைதொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில், சஞ்சார் சாத்தி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், இதை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டு உள்ளது. செயலியைத் துரிதப்படுத்தவும், அதுபற்றி அறியாத மக்களிடமும் எளிதில் கொண்டு செல்வதற்குமே ஆரம்பத்தில் கட்டாயப் பதிவு அறிவிக்கப்பட்டது என்றும் விளக்கமளித்தது.
அதே அறிக்கையில், "ஒரே நாளில் 6 லட்சம் குடிமக்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்து ரிஜிஸ்டர் செய்துள்ளனர், இது 10 மடங்கு அதிகரிப்பு," என்றும் DoT தெரிவித்தது. இதுவரையில் மொத்தமாக 1.4 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சஞ்சார் சாத்திக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அங்கீகாரத்தைக் கருதி, மொபைல் தயாரிப்பாளர்கள் இதை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவத் தேவையில்லை என அரசு தற்போது முடிவெடுத்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications