சங்கீதா விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? விஷயம் தெரிஞ்சா ஆடிப்போய்டுவிங்க!

இன்று தமிழகத்தில் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும் பெயர் என்றால் அது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்-யின் பெயர் தான். ஏனெனில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட விஜய் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றார். முதல் முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்று தமிழக அரசியலில் ஒரு பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார்.

சங்கீதா விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தன்னுடைய சொத்து விவரங்களைப் பற்றி கூறியிருந்தார். தற்போது அவருடைய மனைவி சங்கீதாவின் சொத்து விவரங்கள் பற்றிய சுவாரசியத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லண்டன் டூ சென்னை: சங்கீதா விஜய்யை திருமணம் செய்வதற்கு முன்னர் லண்டனில் வசித்து வந்தார். அவருடைய தந்தை சொர்ணலிங்கம் ஒரு ஈழத் தமிழர். அதுமட்டுமின்றி இவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் கூட. திருமணத்திற்கு முன்னர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தவர் சங்கீதா.

விஜய் நடித்த "பூவே உனக்காக" திரைப்படம் தான் இருவருக்குள் காதல் மலரக் காரணமாகி போனது. அவருடைய திரைப்படத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட சங்கீதா, தனக்கு பிடித்த நடிகரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே சென்னை வந்துள்ளார். அந்த சந்திப்பு சில நாட்களில் காதலாக மாறியது. அதன் பிறகு இரு விட்டார் சம்மதத்தோடு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, 1999-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சங்கீதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?: விஜய் ஒரு சிறந்த திரை பிரபலமாக இருந்ததால் அவருடைய மனைவியாக மட்டுமே வெளியில் தெரிந்தார். ஆனால் உண்மையில் இவர் மிகப்பெரிய தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். லண்டனில் சங்கீதாவின் குடும்பத்திற்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. வெளியான ஊடக தகவல்களின் அடிப்படையில் சங்கீதாவின் சொத்து மதிப்பு ரூ. 400 கோடிக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது சங்கீதா UK-வில் அவர்களுடைய வணிக நிறுவனங்களை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணத்தில், சங்கீதாவின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் சுமார் ரூ.15 கோடி முதல் ரூ.16 கோடி வரை இருக்கும் என்று காண்பித்திருந்தார். இதில் நகைகள், ரொக்கம் மற்றும் கேஷ் டெபாசிட் ஆகியவை அடங்கும். ரூ.10 கோடி கேஷ் டெபாசிட், 2 கிலோ வெள்ளி, ரூ. 4 கோடி மதிப்புள்ள 3132 கிராம் தங்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரத்தை சொந்தமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதோடு விஜய் தனது மனைவிக்கு ரூ.12.6 கோடி வழங்கியிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த சொத்துக்கள் இந்தியாவில் அவர் பெயரில் இருப்பவை மட்டுமே. ஆனால் வெளிநாடுகளில் அவருடைய குடும்பம் மற்றும் பூர்வீக தொழில் மூலம் இருக்கும் சொத்துக்களை கணக்கிட்டால் ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அதேபோல தலைவர் விஜய் தனது பெயரில் ரூ.600 கோடி சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+