சோலார் சிஸ்டம். இது பற்றி நம்மில் பலரும் கேள்விபட்டிருப்போம். ஏன் சிலர் பயன்படுத்திக் கொண்டும் இருக்கலாம். எனினும் அடிப்படியை மட்டும் சற்று தெரிந்து கொள்வோமே.
சோலார் சிஸ்டம் என்பது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் முழுமையாக கூறுகளின் ஒரு தொகுப்பாகும். இது சூரிய ஓளியை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும்.
இது இன்று பெரிய பெரிய வீடுகளின் கூரைகளில் பார்க்க முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சமூக வலைதளத்தில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.
ஆனந்த் மஹிந்திரா டிவீட்
அதில் தென் கொரியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையினை, கீரின் பெல்ட் & ரோடு இன்ஸ்டிடியூட் தலைவர் எரிக் சொல்ஹெயின, வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை தான் ஆனந்த் மகேந்திரா ரீ ட்வீட் செய்திருந்தார். அதில் நெடுஞ்சாலையில் சோலார் பேனல்களுக்கு அடியில் ஒரு சைக்கிள் பாதை உள்ளது. இடு சைக்கிள் ஓட்டுபவர்கள் சூரிய ஓளியில் இருந்து பாதுகாக்கபடுகின்றார்கள், போக்குவரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் இதன் மூலம் நாடு சுத்தமான எரிபொருள் ஆற்றலை பெறும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.
தேவையான இடங்களில் எல்லாம் சோலார்
ஆனால் அது என்ன பிரம்மாதம்? எங்களை பாருங்கள் என திரும்ப வைத்திருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர். சோலார் எனர்ஜினையினை பயன்படுத்தி வரும் இவர். 47 வயதான சஞ்சய் தேஷ்பாண்டே. தனது வீடு, அலுவலகம்,வாகனம் என தனக்கு தேவையான அனைத்து இடங்களிலும் சோலாரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
மாதம் ரூ.18,000 மிச்சம்
இவர் தனது மின்சார காரினையே பயணங்களுக்கு பயன்படுத்துகிறார்,. தனது வீட்டில் கார்டனுக்கு தண்ணீர் செலுத்த கூட சோலார் பம்புகளையே பயன்படுத்தி வருகின்றார். இதன் மூலம் மாதம் 18,000 ரூபாய் சேமிக்க முடிவதாக கூறுகிறார். அதோடு தான் விற்பனை செய்யும் மின்சாரத்தினை விற்பனை செய்வதன் மூலம் 1,000 ரூபாய் சம்பாதிப்பதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்து மூலம் அறிய முடிகிறது.
அப்பாவின் நண்பர் கூறிய ஐடியா
சஞ்சய் இந்த பிரம்மாண்ட ஐடியாவினை தனது தந்தையின் நண்பர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டில் மேல்புறம் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் வீட்டினையும் பாதுகாக்க முடியும். இதன் மூலம் மின்சாரத்தினையும் உற்பத்தி செய்ய முடியும். இதனால் எந்த இடைஞ்சலும் இருக்காது என சஞ்சய் கூறுகின்றார்.
மின்சார கட்டணம் எவ்வளவு வரும் தெரியுமா?
முன்னதாக சஞ்சய்க்கு மாதம் 4,000 மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கடந்த ஆண்டில் வீட்டின் கூரையின் மீது சோலார் பேனல்களை நிறுவினேன். சராசரியாக 4.2 கிலோவாட் சோலார் எனர்ஜியை அமைக்க எனக்கு அனுமதி கிடைத்தது. இது எனது பயன்பாட்டிற்கு பிறகு ஹுப்பள்ளி மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற்கும் வழங்கப்படுகின்றது. எனது மின் கட்டணம் கழித்து மாதம் 500 - 1000 ரூபாய் வரையில் திரும்ப பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்கள்
என்னிடம் இரண்டு மின்சார வாகனங்கள், வீட்டிற்கு தேவையான இயந்திரங்கள், மாடித் தோட்டத்திற்கு தண்ணீர் செலுத்த தேவையான பம்புகள் என பலவற்றையும் செய்கிறோம்.
அவர் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் கூட சிறிய பேனல்களை வைத்துள்ளார். அவை வீட்டில் சிறிய அளவில் வெளிச்சத்தினை ஓளிர செய்ய பயன்படுத்தப்படுகிறது. பல விளக்குகள் மாலைக்கு பிறகு சென்சார்கள் மூலம் தானாக ஒளிர ஆரம்பிக்கின்றன.
பணம் மிச்சம்
இதன் மூலம் பணத்தையும் மிச்சப்படுத்த முடிகிறது. அதோடு சுற்றுசூழலுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
மூன்று வகையான சோலார் பேனல்களை நிறுவியுள்ளேன். அதில் மழை காலத்தின் போது அதிக திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யும் மோசோகிரிஸ்டலின் பேனல்களும் அடங்கும் என கூறுகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications