இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், 2026 டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 97 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இப்போது ரசிகர்கள் மத்தியில் அவரது சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் டிரெண்டாகி வருகிறது.
சஞ்சு சாம்சன் தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதால், தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்னும் அதிகம் பிடித்த நபராக மாறியுள்ளார். கேரளாவில் இருந்து இந்திய கிரிர்கெட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும் சஞ்சு சாம்சன்-ன் சொத்து மதிப்பு, ஐபிஎல் ஊதியம், கார் சேகரிப்பு, சொத்துகள் போன்றவற்றை விரிவாக பார்ப்போம்.

சஞ்சு சாம்சனின் நிகர மதிப்பு
சஞ்சு சாம்சனின் மொத்த சொத்து மதிப்பு 2026-ல் 86 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவரது ஐபிஎல் ஊதியம், பிசிசிஐ ஒப்பந்தம், போட்டி கட்டணம், பிராண்ட் ஒப்பந்தங்கள், சொத்துகள் ஆகியவற்றின் கூட்டு மதிப்பாக 86 கோடி ரூபாய் என ஒன்விஷன் கணித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த இவர், கிரிக்கெட் மூலம் மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் மூலமும் தனது சொத்து மதிப்பை பெருக்கி வருகிறார். தல தோனி போல் சஞ்சு சாம்சன்-யிடம் கார் கலெஷன் அதிகம்.
பிசிசிஐ ஒப்பந்தம் & போட்டி கட்டணம்
சஞ்சு சாம்சன் பிசிசிஐ கிரேடு C ஒப்பந்தத்தில் உள்ளார். இதன்படி ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் பெறுகிறார். மேலும் போட்டி அடிப்படையில் இவருக்கான கட்டணம்:
டி20ஐ: ஒரு போட்டிக்கு ரூ.3 லட்சம்
ஒருநாள்: ஒரு போட்டிக்கு ரூ.6 லட்சம்
டெஸ்ட்: ஒரு போட்டிக்கு ரூ.15 லட்சம்
இது அவரது வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐபிஎல் ஊதிய வரலாறு
சஞ்சு சாம்சன் ஐபிஎல்-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 2013 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும் இவரின் சம்பளம் படிப்படையாக உயர்ந்துள்ளது.
2013 - ரூ.10 லட்சம்
2014 - ரூ.4 கோடி
2016 - ரூ.4 கோடி
2018 - ரூ.8 கோடி
2020 - ரூ.8 கோடி
2022 - ரூ.14 கோடி
2024 - ரூ.14 கோடி
2026 - ரூ.18 கோடி
கார் கலெக்ஷன்
சஞ்சு சாம்சன் ஆடம்பர கார்கள் மீது ஆர்வம் கொண்டவர் என்பதால் பல முக்கிய பிராண்டுகளில் கார்களை வைத்துள்ளார்.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி - ரூ.2.5 கோடி
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் - ரூ.1.8 கோடி
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் - ரூ.70 லட்சம்
ஆடி A6 - ரூ.60 லட்சம்
மெர்சிடிஸ்-பென்ஸ் - ரூ.65 லட்சம்
லெக்ஸஸ் ES 300h - ரூ.65 லட்சம்
சொத்துகள் மற்றும் முதலீடுகள்
சஞ்சு சாம்சனுக்கு கேரளாவில் வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ.6-7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கூடுதல் சொத்துகள் உள்ளன. கேரளாவில் பூர்வீக நிலமும் உள்ளது.
பிராண்ட் ஒப்பந்தங்கள்
சஞ்சு சாம்சன் பல பிரபல பிராண்டுகளின் தூதராக உள்ளார். கேரளா பிளாஸ்டர்ஸ் FC (ஐஎஸ்எல்), கிளப் மஹிந்திரா, அசிக்ஸ், கில்லெட், வாக்மேட் ஆகியவை அடங்கும். இந்த ஒப்பந்தங்கள் அவரது வருமானத்தை மேலும் அதிகரிக்கின்றன.
மொத்தத்தில், சஞ்சு சாம்சன் கிரிக்கெட் மூலம் மட்டுமின்றி பிராண்ட் ஒப்பந்தங்கள், முதலீடுகள் மூலமும் தனது செல்வத்தை வளர்த்து வருகிறார். 2026-ல் அவரது நிகர மதிப்பு ரூ.86 கோடியாக உள்ளது. டி20 உலக கோப்பையில் அவரது ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவராக அவரை உறுதிப்படுத்துகிறது. ரசிகர்கள் அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
தல தோனி
இந்திய கிரிக்கெட் உலகின் ஓரே தலை.. எம்.எஸ்.தோனி-யிடம் ஆடம்பரமான கார் மற்றும் பைக் கலெக்ஷன் வியப்புக்குரியது. 70-க்கும் மேற்பட்ட கார்களை கொண்ட அவரது பிரம்மாண்ட கார் கலெக்ஷனில் விண்டேஜ் மாடல்கள், எஸ்யூவிகள் மற்றும் சூப்பர் கார்கள் உள்ளன.
இதில் முக்கியமான மற்றும் காஸ்ட்லியான கார்கள் பட்டியலில் Ferrari 599 GTO, Hummer H2 மற்றும் பழமையான Pontiac Firebird போன்றவை முக்கியமானது. 2024-2025 நிலவரப்படி, தோனியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 1,060 கோடி என மதிப்பிடப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications