நாட்டின் விலைவாசி என்பது ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் அடைந்து வருகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லிட்டர் பாலின் விலை என்னவாக இருந்தது தற்போது என்னவாக இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் நமக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்படும்.
அவ்வளவு குறைந்த விலைக்கு வாங்கிய பொருட்களையா நாம் தற்போது இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம் என தோன்றும் . நாம் வீடுகளில் அன்றாட பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி , மருந்து , வீடு, தங்கம் , வெள்ளி என அனைத்திற்குமே ஒவ்வொரு ஆண்டும் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு ஹோட்டல் சரவண பவனில் உணவு அருந்தியதற்காக வழங்கப்பட்ட ரசீதினை ஒரு நபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அது தற்போது எக்ஸ் பக்கத்தில் பலராலும் பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது . சுரேஷ்குமார் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2009 ஆம் ஆண்டு ஹோட்டல் சரவண பவனில் இட்லி, சப்பாத்தி ஒரு மினி காபி ஆகியவற்றுக்கான ரசீதினை வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்துக்கும் சேர்த்து வெறும் ஐம்பது ரூபாய் தான் என பதிவு செய்திருக்கிறார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட அந்த ரசீதையும் அவர் பதிந்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடபழனியில் இருக்கும் சரவணபவன் ஹோட்டலில் இட்லி,சப்பாத்தி, மினி ஸ்பெஷல் பில்டர் காபி ஆகியவை சேர்த்து வாட் வரியுடன் 50 ரூபாய்க்கு பில் போடப்பட்டுள்ளது.
அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. சரவணபவன் குறித்தும் அப்போது இருந்த விலைவாசி குறித்தும் பலரும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளணர். பெரும்பாலான மக்கள் 2009 ஆம் ஆண்டு நம்முடைய வருமானத்தில் ஒப்பிடும்போது இந்த விலை சற்று அதிகம் தான் என கூறியுள்ளனர்.
ஒரு சிலர் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இதில் அச்சிடப்பட்டிருக்கும் மை அழியவே இல்லையே என ஆச்சரியம் தெரிவித்திருக்கின்றனர். சிலர் good old days, golden days என்றும் கூறியுள்ளனர். ஒரு நபர் விலைவாசிகள் உயர்ந்துவிட்டது ஆனால் நினைவுகள் அப்படியேதான் இருக்கின்றன என கூறியிருக்கிறார். ஒரு நபர் இந்த பணத்திற்கு தற்போது ஒரு காபி மட்டும் தான் வாங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
சரவண பவன் என்றாலே நல்ல சுவையான தரமான உணவுக்கு பெயர் போனது ஆனால் முன்பை போல இப்போது ருசி இருப்பது இல்லை என்றும் அந்த காலத்திலேயே இது காஸ்ட்லியான உணவகம் தான் என்றும் பலரும் பின்னூட்டம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications