Sarvam AI: சாட் ஜிபிடி, டீப் சீக் போல கூடிய விரைவில் இந்தியாவின் சொந்த LLM..!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் எல்லாம் முன்னிலையில் இருக்கும் போது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏன் எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கனவுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ செயலியை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து கூகுளின் ஜெமினி, மெட்டாவின் மெட்டா ஏஐ, எக்ஸின் குரோக் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன. சீனா அண்மையில் டீப் சீக் என்ற தங்களின் ஜெனரேட்டிவ் ஏஐ மாடலை உலகிற்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஏன் இது போன்ற ஒரு செயலி வரவில்லை என கேள்வி எழுந்தது.

Sarvam AI: சாட் ஜிபிடி, டீப் சீக் போல கூடிய விரைவில் இந்தியாவின் சொந்த LLM..!

இந்நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் ஏஐ நிறுவனத்தை தேர்வை செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈசிஎம்எஸ் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாட்டின் செயற்கை நுண்ணறிவு அடித்தள மாதிரியை உருவாக்க 67 நிறுவனங்களிடமிருந்து திட்ட அறிக்கை பெறப்பட்டதாகவும் இதில் சர்வம் ஏஐ நிறுவனத்தை இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏஐ அடித்தள மாதிரியே உருவாக்க தேர்வு செய்திருப்பதாகவும் கூறினார்.

கூடிய விரைவில் மேலும் இரண்டு அல்லது மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவேக் ராகவன் மற்றும் பிரதியூஷ் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது தான் சர்வம் ஏஐ நிறுவனம். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ஏஐ ஃபார் பாரத் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்கள். இது ஏஐக்கான எல்எல்எம் மாடல்களை உருவாக்கி தந்துள்ளது.

சர்வம் ஏஐ நிறுவனத்தை பொருத்தவரை ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாடல்களை உருவாக்கி வருகிறது. ஆதார் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் தான் விவேக் ராகவன் இவர் சர்வம் ஏஐ நிறுவனம் இந்திய நிறுவனங்களோடு இணைந்து குறிப்பிட்ட டொமைன்களுக்கான மாடல்களை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தான் சர்வம் ஏஐ நிறுவனம் 41 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியது. பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு சர்வம் ஏஐ நிறுவனம் செயல்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 10 மாதங்களுக்குள் இந்தியாவின் சாட் ஜிபிடி பயன்பாட்டுக்கு வந்து விடும் என அறிவித்திருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+