முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சர்வேஷ் சஷி துணிச்சலாக தனது கிரிக்கெட் கேரியரை விட்டுவிட்டு யோகா மீதான ஆர்வத்தைத் தொடர்ந்தார். அவர் தொடங்கிய ஆரோக்கிய நல நிறுவனமான சர்வா இப்போது ரூ.100 கோடி மதிப்பை எட்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டில் சர்வா நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு சினிமா பிரபலங்களான மலாய்க்கா அரோரா, மிரா கபூர், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் மிகுந்த ஆதரவைத் தந்தனர்.

சென்னையில் மூன்று ஸ்டூடியோக்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது 32 நகரங்களில் 90க்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்களுடன் செயல்படுகிறது.
மாடர்ன் லைப்ஸ்டைல் சவால்களை சமாளிப்பதற்கான தீர்வுகள் பற்றி இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
சர்வா நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகள் வந்து குவிகின்றன.
யோகா கலையின் மீது சர்வேஷுக்கு உள்ள அர்ப்பணிப்பு காரணமாக சர்வா நிறுவனம் வெற்றி அடைந்துள்ளது. தனது சஷி குமாரின் வழிகாட்டுதல் காரணமாக சர்வேஷுக்கு யோகா மீது ஆழ்ந்த பற்று ஏற்பட்டுள்ளது.
அவர் தொழில் தொடங்குவதற்கு முன்பாக சர்வேஷ் கிரிக்கெட்டில் பிரபலமாக இருந்தார். இந்திய பிரிமீயர் லீக்கான ஐபிஎல்லில் அவர் விளையாடினார். இருப்பினும் அவருக்கு யோகா மீது இருந்த ஆர்வத்தினால் கிரிக்கெட்டை விட்டு விட்டு அவர் யோகா பயற்சியில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
வெர்ச்சுவல் பாடங்களை வழங்கும் அதன் சொந்த அப்ளிகேஷன் மூலம், சர்வா ஆரோக்கிய துறையில் தன்னை ஒரு முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் $14.1 மில்லியன் மதிப்புள்ள நிறுவனம், சர்வேஷின் தலைமையின் கீழ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
வணிக வெற்றிக்கு அப்பால், ஜான்வி கபூர், ஷ்ரியா சரண், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களுக்கு பயிற்சி அளித்து, உடற்பயிற்சி சமூகத்தில் சர்வேஷ் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார். கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்து ஆரோக்கிய ஸ்டுடியோவுக்கு அவரது பயணம் பல ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு உத்வேகமாக உதவுகிறது.


Click it and Unblock the Notifications