எந்தவொரு போராட்டத்தின் பயணமும் வெற்றியின் இலக்கை நிச்சயம் எட்டியடையும் என்று சொல்லப்படுகிறது. இது ஷஷி சோனியின் கதையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. அவர் தற்போது ரூ. 4,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஆனால் இந்த வர்த்தகத்திற்கு வெறும் ரூ. 10,000 ஆரம்ப முதலீட்டில் அவர் தனது வணிக சாம்ராஜ்யத்துக்கு அடித்தளமிட்டார் என்பதை அறியும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர்களின் பட்டியலில் வணிக உலகில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு நபர்களில் அவரும் ஒருவர். எளிமையான தோற்றத்திலிருந்து அசாதாரண வெற்றிக்கான சஷியின் குறிப்பிடத்தக்க பயணத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
சஷி தனது முதல் பிசினஸை 1971 ஆம் ஆண்டு தொடங்கினார், ரூ.10,000 முதலீட்டை வைத்து அவர் தீப் டிரான்ஸ்போர்ட் (Deep Transport) நிறுவனத்தை ஆரம்பித்தார். 1975 ஆம் ஆண்டில் அவர் வெற்றிகரமாக நிர்வாகத்தை கவனித்துவிட்டு சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.
1975 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள முலுந்த் பகுதியில் தீப் மந்திர் என்னும் சினிமா தியேட்டரை அவர் நிறுவினார். 1980 ஆம் ஆண்டு வரை அந்த தியேட்டர் இருந்தது. பத்தாண்டு கடும் சிரமத்துக்குப் பின்னர் சஷி வெற்றியின் சுவையை ரசிக்க துவங்கினார்.
இதன் பின்பு ஆக்ஸிஜன் பிரைவேட் லிமிடெட்டை தொடங்கினார். மைசூரில் உள்ள அந்த கேஸ் தயாரிப்பு நிறுவனம் அவரது எதிர்கால வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்தது. படிப்படியாக தனது தொழிலை விரிவுபடுத்திய சஷி டெக்னிகல் துறையில் நுழைந்தார்.
2005 ஆம் ஆண்டில், ஷஷி சாப்ட்வேர் நிறுவனத்தை நிறுவினார், இது IZMO லிமிடெட் என்ற பெயரில் இயங்குகிறது. மைசூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் உலகளவில் உயர் தொழில்நுட்ப ஆட்டோமோட்டிவ் மற்றும் ஆன்லைன் ரீடைல் விற்பனை தீர்வுகளை வழங்குகிறது. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டிலும் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் ஷஷி, நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார்.
தனது வணிக புத்திசாலித்தனம் தவிர, சஷி பல்வேறு சமூக காரணங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் ஜனசேவா சமிதியின் உறுப்பினராக உள்ளார். வேலை வாய்ப்புகள், பெண்களுக்கான கல்வி, ஓய்வூதியத் திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டுதல் ஆகியவற்றில் தீவிரமாக பங்களிக்கிறார்.
மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்கு முன்பு, சஷி சோனி வணிகம் மற்றும் சமூக நலத் துறைகளில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றார். 1990 இல், இந்தியத் தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதைப் பெற்றார்.
கூடுதலாக, அவர் அனைத்து இந்திய தொழில்துறை எரிவாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் குழு உறுப்பினராக பணியாற்றினார். தொழில்நுட்ப மேம்பாட்டு இயக்குநரகத்தில் பதவி வகித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications