மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் நிறுவனர்கள் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்கு பின்பு இந்த ஹாட் சீட்டில் உட்கார்ந்த சத்ய நாடெல்லா தனது கடின உழைப்பின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடந்த 8 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சியை பதிவு செய்ய வைத்துள்ளது.
இன்று 56வது பிறந்த நாள் கொண்டாடும் சத்ய நாடெல்லா-வின் பர்சனல் லைப் பலரும் அறியாத ஒன்றாகவே உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த அதே 1992 ஆண்டு நாடெல்லா தனது கல்லூரி காதிலியான அனுபமா-வை மணமுடித்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாஷிங்டன்னில் வசித்து வருகிறார்.

சத்ய நாடெல்லா- அனுபமா-வின் முத்த குழந்தை ஜைன் நாதெல்லா பிறவியிலேயே பார்வையற்றவராகவும், நடக்க முடியாதவராகவும் பிறந்தார். ஜெய்ன் பெருமூளை வாதம் நோயுடன் பிறந்தார், இது அவரை இளம் வயதிலேயே ஊனமாகவும் பார்வையற்றவராகவும் ஆக்கியது. 26 வயதான ஜைன், மார்ச் 2022 இல் இறந்தார்.
சத்ய நாடெல்லா- அனுபமா-வின் 2வது குழந்தை தாரா நாதெல்லா, இவருக்கு கற்றல் சிக்கல் (learning issue) உள்ளது, இதனால் அவளுடைய பள்ளி கல்வியை பெரிய அளவில் பாதித்தது. தாரா கனடாவின் வான்கூவரில் உள்ள ஈட்டன் ஆரோஸ்மித் அகாடமி என்ற சிறப்புக் கல்விப் பள்ளியில் பயின்றார். தற்போது தாரா நாதெல்லா-வுக்கு 20 வயது

சத்ய நாடெல்லா- அனுபமா-வின் மூன்றாவது குழந்தை திவ்யா நாதெல்லா. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், இப்போது என்ன செய்கிறார் என்பது குறித்தும் பெரிய அளவில் வெளியுலகத்திற்கு தெரியவில்லை. எனவே அவரது வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரியாமலேயே உள்ளது.

சத்ய நாடெல்லாவின் தாயார் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தார். இவரது தந்தை புக்காபுரம் நாதெள்ளா யுகந்தர் 1962 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சத்ய நாடெல்லா மனைவி அனுபமா, இவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ஆவார். அனுபமா மணிப்பால் கல்லூரியில் சத்யா நாடெல்லாவின் ஜூனியர் ஆவார்.


Click it and Unblock the Notifications