மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக 2014 முதல் அசத்தி வரும் சத்ய நாடெல்லா கிளவுட், கேமிங், ஏஐ என வேகமாக ஓடும் 3 குதிரைகளை கொண்டு இந்நிறுவனத்தின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு உள்ளார். பில் கேட்ஸ், ஸ்வீட் பால்மர்-க்கு பின்பு மைக்ரோசாப்ட் சிஇஓ பதவியை சத்யா பெற்ற போது பல விமர்சனங்கள் வந்தாலும் தற்போது இதற்கான பலன் கிடைத்து வருகிறது.
இன்று 56வது பிறந்த நாள் கொண்டாடும் சத்ய நாடெல்லா-வின் வர்த்தகம், பதவி குறித்து அனைவரும் தினமும் தெரிந்துக்கொண்டு வந்தாலும், அவருடைய பர்சனல் லைப் குறித்து அதிகமானோருக்கு தெரியாது. சத்ய நாடெல்லா-வின் குடும்பம், காதல் கதை, திருமணம், குழந்தைகள்..

ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு மணிப்பால் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து 1988-ம் வருடம் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்ற இவர் மில்வாக்கில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினி அறிவியல் படிப்பில் தனது முதுகலைப் பட்டத்தை பெற்றார். அதுமட்டும் இல்லாமல் சிகாகோ பூத் பிஸினஸ் பள்ளி பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார்.
கல்லூரி படிப்பை முடித்த உடனே முதலில் ஆரக்கில் நிறுவனத்தின் சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நாடெல்லா 1992-ம் ஆண்டு மைக்ரோசாப்ட்டில் சேர்ந்தார். இந்நிறுவனத்தில் நீண்ட காலம் பயணம் செய்யும் நாடெல்லா bing பிரவுசர் மைக்ரோசாப்ட்டுக்கு பெரிய சொத்தாக இருந்ததில்லை என்றாலும் அதன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
சத்ய நாடெல்லாவின் தாயார் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தார். இவரது தந்தை புக்காபுரம் நாதெள்ளா யுகந்தர் 1962 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சத்ய நாடெல்லா மனைவி அனுபமா, இவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ஆவார். அனுபமா மணிப்பால் கல்லூரியில் சத்யா நாடெல்லாவின் ஜூனியர் ஆவார்.

பெரும்பாலான கல்லூரி காதல் கதை போலவே சத்ய நாடெல்லாவும் தனது ஜூனியரான அனுபமா-வை காதலித்தார். சத்ய நாடெல்லா-வின் தந்தையும் சரி, மாமனாரும் சரி ஐஏஎஸ் அதிகாரி என்பதாலும், அமெரிக்க நிறுவனத்தில் முக்கிய பணியில் இருப்பதாலும் அவர்களுடைய காதலுக்கு யாரும் முட்டுக்கட்டை போடவில்லை.
இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த அதே 1992 ஆண்டு நாடெல்லா தனது கல்லூரி காதிலியான அனுபமா-வை மணமுடித்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள். ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாஷிங்டன்னில் வசித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications