அமெரிக்க நிறுவனங்களில் தலைமை வகிக்கும் இந்தியர்களில் மிகவும் முக்கியமானவர் சதய் நாடெல்லா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பும், நிர்வாகக் குழுவின் அதிகாரமும் சத்ய நாடெல்லா தலைமையில் வந்த நாள் முதல் அரசு திட்டங்களைப் பெறுவதில் இருந்து சேவை விரிவாக்கம், நிறுவனத்தைக் கைப்பற்றுவது, புதிய சேவையை அறிமுகம் செய்வது என மைக்ரோசாப்ட் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் தற்போது ஆன்லைன் கேமிங் பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Activision Blizzard என்னும் நிறுவனத்தைச் சுமார் 68.7 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளார். கேமிங் துறையில் இவ்வளவு பெரிய தொகையைச் சத்ய நாடெல்லா முதலீடு செய்ய என்ன காரணம்..?
மைக்ரோசாப்ட்
இந்நிலையில் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் அனைத்து வர்த்தகத் துறையிலும் புதிதாக வர்த்தகத்தைத் துவங்க முடியாது என்பதால் தத்தம் துறையில் முன்னோடியாக இருக்கும் நிறுவனத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது மைக்ரோசாப்ட்.
ஸ்கைப் டூ டீம்ஸ்
ஸ்கைப்-ல் துவங்கி லின்கிடுஇன், லாக்டவுன் காலத்தில் டிக்டாக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி, ஜூம் செயலிக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் என்ற வகையில் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் ஒவ்வொரு சேவை பிரிவிலும் மைக்ரோசாப்ட் நுழைந்து வருகிறது.
ஆன்லைன் கேமிங் துறை
இந்த வகையில் தற்போது ஆன்லைன் வாடிக்கையைளர்கள் அதிகம் இருக்கும் ஆன்லைன் கேமிங் துறையில் ஏற்கனவே எக்ஸ்பாக்ஸ் உடன் பல கேமிங் நிறுவனத்தை வைத்திருந்தாலும், தனது மேலோங்கி இருக்க வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காகப் புதிதாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
Activision Blizzard நிறுவனம்
ஆன்லைன் கேமிங் துறையில் சீன நிறுவனங்களுக்கு இணையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் அமெரிக்கக் கேமிங் நிறுவனமான Activision Blizzard நிறுவனத்தைச் சுமார் 45 சதவீத ப்ரீமியம் விலையில் மொத்தமாக 68.7 பில்லியன் டாலர் தொகைக்கு மைக்ரோசாப்ட் கைப்பற்றியுள்ளது.
முக்கியமான கேம்கள்
இந்தக் கைப்பற்றல் மூலம் ஓவர்வாட்ச், டியாப்லோ, கால் ஆப் டியூட்டி, வோர்ல்டு வார்கிராப்ட், கேன்டி கிரஷ், ஸ்டார் கிராப்ட் போன்ற பல பிரபலமான ஆன்லைன் கேம்களைக் கைப்பற்றியுள்ளது.
எக்ஸ்பாக்ஸ்
மைக்ரோசாப்ட் ஆன்லைன் கேமிங் துறையில் தனது எக்ஸ்பாக்ஸ் வர்த்தகத்தைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மாபெரும் திட்டத்துடன் 2011 முதல் பல முன்னணி கேமிங் நிறுவனங்கள் மற்றும் கேம்களைக் கைப்பற்றி வருகிறது.
மைக்ரோசாப்ட் கிளவுட்
மைக்ரோசாப்ட் தனது கிளவுட் சேவை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் அடுத்தச் சில மாதத்தில் மொபைல் கேமிங் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத்தைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் Stadia
ஆன்லைன் கேமிங் கன்சோல் வர்த்தகத் துறையில் மைக்ரோசாப்ட், சோனி, ஜப்பான் நிண்டெண்டோ ஆகியவற்றுக்குப் போட்டியாகக் கூகுள் Stadia என்னும் அதிநவீன திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அதைச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே கூகுள் தனது கேமிங் குழுவை பிப்ரவரி 2021ல் மூடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications