சத்ய நாடெல்லா 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO ஆகப் போகிறார் என்பதை அறிந்தபோது அவர் எப்படி உணர்ந்தார் என்பதைச் சமீபத்தில் ஒரு பேட்டியில் சற்றும் குறையாத பூரிப்புடன் தெரிவித்தார்.

56 வயதான சத்ய நாடெல்லா அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக ஒரு நியமிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த இந்தியாவும் அவரைக் கொண்டாடியது. இந்த நிலையில் சத்ய நாடெல்லா ஜெர்மனி நாட்டின் முன்னணி மாஸ் மீடியா நிறுவனமான Axel Springer-ன் நேர்காணலுக்காகப் பெர்லின் தலைமையகத்திற்குச் சென்றார்.
இப்பேட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக அறிவிக்கப்பட்ட அந்தத் தருணத்தைப் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தானும் வளர்ந்த நிலையில், என்னுடைய வாழ்க்கையின் அங்கமாகவே மாறியது. முதலில் பில் கேட்ஸ் பதவியில் இருந்தபோது அவரின் கீழ் பணியாற்றினேன், அதன் பின்னர் ஸ்டீவ் பால்மர் பதவியில் இருந்தபோதும் அவரின் கீழ் பணியாற்றினேன்.
நான் காலையில் எழுந்து எப்போதும் மைக்ரோசாப்ட் பில் அல்லது ஸ்டீவ் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துக் கூடக் கிடையாது. மேலும் வெளிப்படையாக, ஸ்டீவ் வெளியேறப் போவதாக அறிவித்தபோது, அது எனக்கு ஒரு உண்மையாக அதிர்ச்சியாக இருந்தது," என்று சத்ய நாடெல்லா கூறினார்.
என்னைச் சிஇஓ-வாக இருக்க விரும்புகிறீர்களா?" என்று நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவர் என்னிடம் மிகவும் தெளிவாகக் கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு நான், 'நீங்கள் விரும்பினால் மட்டும் நான் CEO ஆக வேண்டும்' என்று பதிலளித்தேன். இதை நான் உடனே ஸ்டீவ் பால்மரிடம் சொன்னேன்.
மைக்ரோசாப்ட் போர்டு உறுப்பினர்கள் என்னிடம், 'நீங்கள் CEO ஆக விரும்பினால், நீங்கள் உண்மையில் CEO ஆக வேண்டும்' என்று மிகவும் தெளிவாகக் கேட்டனர். நான், 'கடவுளே, நான் அதைப் பற்றி யோசித்தது கூட இல்லை, எனக்குத் தெரியாது' என்றேன்.

ஸ்டீவ் மிகவும் சுவாரஸ்யமானவர், நான் இதைக் கூறியதுடன் "மாற்றுவதற்கு இது மிகவும் தாமதமானது, எனவே நீ நீயாகவே இரு, என்ன நடக்கிறது என்று பாரு"," என்று சத்ய நாடெல்லா கூறினார். அடுத்தச் சில நாட்களில் மைரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் சத்ய நாடெல்லா பெயர் அறிவிக்கப்பட்டது. அதிலும் இந்தப் புகைப்படம் மிகவும் அரிதானது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 1975 இல் நிறுவப்பட்டதில் இருந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வழிநடத்தும் மூன்றாவது நபர் சத்ய நாடெல்லா. 2014 வரையில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் மட்டுமே தலைமை தாங்கியுள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications