மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சி, வர்த்தகம் பில் கேட்ஸ் பின்பு சிஇஓ-வாகத் தலைமையேற்ற ஸ்டீவ் பால்மர் காலத்தில் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்தது. புதிய முன்னேற்றங்கள், புதிய வர்த்தகத்திற்குள் நுழைய முடியாமல் எதிர்கால வளர்ச்சி குறித்து முதலீட்டாளர்கள் கவலை தெரிவிக்கத் துவங்கினர்.
இதேவேளையில் தான் ஸ்டீவ் பால்மர் 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் காலம் வந்தது, இவர் 2000 முதல் 2014 வரையிலான காலத்தில் சிஇஓ-வாக இருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த சிஇஓ யார் என்ற கேள்வி எழுந்தது பல மாத ஆய்வு ஆலோசனைக்குப் பின்பு பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் இணைந்து சத்ய நாடெல்லாவை தேர்வு செய்தனர்.

அன்று முதல் சத்ய நாடெல்லாவின் சிங்க பாதை துவங்கியது, இன்று இவரது தலைமையில் மைக்ரோசாப்ட் பங்குகள் கடந்த 10 வருடத்தில் 1041 சதவீத வளர்ச்சி அடைந்து சுமார் 3 டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஒரு ஐஏஎஸ் தந்தையின் மகனாக ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாடெல்லா ஐஐடி கல்லூரியில் அட்மிஷன் பெற முடியாத காரணத்தால் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் 1988 ஆம் ஆண்டுப் பட்டம் பெற்று, மேற்படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்தார். அமெரிக்காவில் கல்லூரி படிப்பை முடித்த கையோடு அப்போது மிகப்பெரிய டெக் நிறுவனமான இருந்த சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
சில ஆண்டுகளிலேயே சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை விடுத்து 1992 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது தலைமையில் தான் மைக்ரோசாப்ட் தனது கிளவுட் சேவை கட்டமைக்கப்பட்டது, இது தான் OS வர்த்தகத்தைத் தாண்டி மைக்ரோசாப்ட் லாபத்தை அள்ளிய முக்கியத் துறையாக இருந்தது.
இது மட்டும் அல்லாமல் சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட்-ன் R&D பிரிவின் தலைவராக இருந்தார், இதன் மூலம் கிளவுட் சேவை, சர்வர் டூல்ஸ், கிளவுட் டெவலப்பர் டூல்ஸ்-ல் பெரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டுப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. இதன் வெற்றியில் உருவானதே Azure.
சத்ய நாடெல்லாவின் செயல்பாட்டைக் கவனித்த பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் 2014ல் பிப்ரவரி மாதம் அவரை சிஇஓ ஆக அறிவித்தனர். இவர் சிஇஓ-வாகப் பதவியேற்றிய பின்பு விண்டோஸ் ஓஎஸ் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்கொண்டு 73 சதவீத சந்தை பங்கீட்டை பெற்றது.
இதைத் தொடர்ந்து துணிச்சலாக நோக்கிய வர்த்தகத்தை விற்பனை செய்துவிட்டு லின்கிடுஇன், கிட்ஹப், Activision Blizzard உட்பட 50க்கும் அதிகமான நிறுவனங்களைக் கைப்பற்றப்பட்டது. சமீபத்தில் செய்யப்பட்ட OpenAI நிறுவன முதலீட்டின் மூலம் மைக்ரோசாப்ட் எதிர்காலம் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பிரகாசமாக உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications