IT நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுவும் முன்னணி நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 3 சதவீதமாகும். இந்தப் பணி நீக்கம் குறித்து பரவலாகப் பேசப்பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்திய நாதெல்லா நிறுவனம் ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நிறுவனத்தில் பேசிய சத்ய நாதெல்லா பணி நீக்கங்கள் ஊழியர்களின் செயல்திறனை பற்றியது மட்டும் கிடையாது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தான் இந்த பணி நீக்கங்கள் நடந்தது என்று கூறினார். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தனது செயல்பாடுகள் அனைத்தையும் AI மூலம் கையாளும் வகையில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு AI தொழில்நுட்பத்தில் 80 பில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் AI திறன்களை விரிவுபடுத்தி பல்வேறு தளங்கள் மற்றும் சேவைகளுக்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உதவியாளர்களை வெளியிடவுள்ளது.
இந்த மாற்றத்தில் சில ரோல்கள் குறிப்பாக ப்ராடக்ட் டெவலப்மெண்ட் மற்றும் இன்ஜினியரிங் போன்ற ரோல்களில் அதிக அளவிலான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஐ தொழில்நுட்பத்தை மாற்றி அமைப்பதற்காக இந்த பணி நீக்கங்கள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ப்ராடக்ட் அதிகாரியான அபர்ணா, அதே நிகழ்வின்போது சில கருத்துக்களைக் கூறினார். அதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது மட்டும் போதாது. ஏற்கனவே கோடிங் இறந்துவிட்டது என்ற கருத்துக்களை முன்னிறுத்தி கூறினார். இதிலிருந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பல விஷயங்கள் எளிதாக செய்ய முடிகிறது என்பதை அவர் மறைமுகமாகக் கூறியதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே AI தொழில்நுட்பம் பாதி வேலை வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளை பணியமர்த்தும் விகிதம் 50 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் புதுப்புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டால் தங்களுக்கு என ஒரு வேலை வாய்ப்பை பெறுவது அவ்வளவு சிரமமாக இருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications