மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாடெல்லா புதன்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை முழுமையாகப் பார்த்தது மட்டும் அல்லாமல் ஸ்கிரீனை விட்டு நகரவே இல்லை என்று கூறினார்.
நேற்றைய அட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரையில் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது மட்டும் அல்லாமல் நியூசிலாந்து பேட்டிங்கின் போது
டேரில் மிட்செல் ஆட்டம் இந்திய அணிக்குப் பயத்தை ஏற்படுத்தியது யாராலும் மறுக்க முடியாது. ஆனால் ஷமியின் சிறப்பான பந்துவீச்சும் 7 விக்கெட்டும் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல வழிவகுத்தது.

இத்தகைய மேட்ச்-ஐ யாராலும் மிஸ் செய்ய முடியாது என்பது போல் நேற்று பல பிரபலங்கள் நேரிலும், டிவியிலும் பார்த்துள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்திற்கு ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிரூத் தந்தை, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷன் எனச் சினிமா தொழிற்துறை பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இதன் மூலம் நேற்று விராட் கோலி 50வது சதத்தை அடித்த போது இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் கிரிகெட் ரசிகர்கள் ஒன்று கூடிய நேரத்தில் டிஸ்னியின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான Disney+ Hotstar தளத்தில் பார்வையாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது.
இப்படிப்பட்ட தருணத்தை எந்தொரு கிரிக்கெட் ரசிகராலும் மிஸ் செய்ய முடியாது என்பதை நிரூபணம் செய்யும் வகையில் சியாட்டிலில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் இக்னைட் 2023 டெவலப்பர் மாநாட்டில் சிறப்புரையாற்றிய சத்ய நாடெல்லா, உலகக் கோப்பை அரையிறுதி போட்டியைக் காண இரவு முழுவதும் விழித்திருந்ததாகவும் அதைப் பெருமையுடனும் கூறினார்.
"உலகக் கோப்பை அரையிறுதி போட்டி அதாவது கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடக்கும் நாளில் நாங்கள் இக்னைட் கூட்டத்தைத் திட்டமிடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது," என்று சத்ய நாடெல்லா மேடையில் வந்த பிறகு முதலில் கூறினார். இக்னைட் கூட்டத்தில் சத்ய நாடெல்லா பேச்சு சில நிமிடங்கள் தாமதமாகத் துவங்கியதையும் சமுக வலைத்தளத்தில் பேசப்பட்டது.
கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை காண நான் இரவு முழுவதும் விழுத்திருந்தேன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் முடிந்தது. மேட்ச் பார்த்துவிட்டு நேராகக் கூட்டத்திற்கு வந்துவிட்டேன், இந்தியா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் இக்னைட் 2023 டெவலப்பர் மாநாட்டில் சத்ய நாடெல்லா கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்ய நாடெல்லா தீவிர கிரிக்கெட் ரசிகர், அவர் தனது பள்ளியின் கிரிக்கெட் அணியிலும் இருந்துள்ளார், டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்கும் அவருக்கு இப்போது டி20 போட்டிகளும் பிடிக்கத் துவங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் புதிய T20 ஃபிரான்சைஸ் லீக்கான மேஜர் லீக் கிரிக்கெட்டில் (MLC) சியாட்டில் உரிமையைச் சொந்தமாக வைத்து செயல்படுத்தும் டெல்லி கேபிடல்ஸ் உடன் சத்ய நாடெல்லா கைகோர்த்தார். சியாட்டில் ஓர்காஸ் என்ற அணியில் முன்னணி முதலீட்டாளர்களில் அவரும் ஒருவர்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகர் ஆவார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications