OpenAI நிறுவனத்தில் நடந்து வரும் கலவரத்திற்கு அதன் நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி நிர்வாகக் குழுவைப் பதவியில் இருந்தும், நிர்வாகத்தில் இருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அதன் 700 ஊழியர்களில் சுமார் 505 ஊழியர்கள் நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
OpenAI நிறுவனத்தில் நிர்வாகம் ராஜினாமா செய்யவில்லையெனில் 505 ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி கடிதம் அனுப்பியுள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த 505 ஊழியர்களில் சமீபத்தில் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட மிரா முராட்டி முதல் சாம் ஆல்ட்மேன்-ஐ பணிநீக்கம் செய்த Ilya Sutskever-ம் உள்ளனர்.

இந்த நேரம் பார்த்து மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் எங்கள் நிறுவனத்தில் பணி உண்டு எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உருவாக்கியுள்ள புதிய AI Research அணியின் தலைவராகச் சாம் ஆல்ட்மேன்-ஐ நியமித்துள்ளது தான்.
சாம் ஆல்ட்மேன் OpenAI நிறுவனத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து ஊழியர்களையும் ஈர்க்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நேற்று வரையில் 505 ஆக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 770க்கு 743 பேர் ராஜினாமா செய்வதாகக் கையெழுத்திட்டு உள்ளனர் என OpenAI நிறுவனத்தின் ஈவென்ட் மேனேஜர் Evan Morikawa தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 95 சதவீத ஊழியர்கள் சாம் ஆல்ட்மேன்-க்கும் மைக்ரோசாப்ட்-க்கும் ஆதரவாக உள்ளனர். மேலும் OpenAI நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் மைக்ரோசாப்ட் தற்போதைய நிர்வாகக் குழு இடத்தில் நுழையத் தான் இந்த வேலை நடப்பதாகக் கூறப்படுகிறது.
OpenAI நிறுவனத்தில் கூடுதல் முதலீட்டைச் செய்யப் போதுமான முதலீடும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருக்கும் பட்சத்தில், ஊழியர்களின் கோரிக்கை படி OpenAI நிர்வாகம் ராஜினாமா செய்தால் 95 சதவீதம் ஊழியர்கள் ஆதரவுடன் மைக்ரோசாப்ட் நிர்வாகத்தைக் கையில் எடுக்கலாம், காரணம் மைக்ரோசாப்ட் தான் பெரும் முதலீட்டாளராக உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications