உலகின் மிகப்பெரிய ஏஐ நிறுவனமான ஓப்பன்ஏஐ நிர்வாகத்தில் கடந்த ஒரு வாரமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து. 745 ஊழியர்களின் நெருக்கடிக்கு பதில் சொல்லும் வகையில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் பழைய நிர்வாக குழுவை டிஸ்மிஸ் செய்துவிட்டு மீண்டும் சிஇஓ ஆக பதவியேற்க உள்ளார் சாம் ஆல்ட்மேன்.
இந்த நிலையில் சாம் ஆல்ட்மேன் மற்றும் சத்ய நாடெல்லா-வின் டிவீட் முக்கியமான விஷயத்தை கூறுகிறது. இருவரின் டிவீட் மூலம் தங்களின் கூட்டணியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது மட்டும் அல்லாமல் அவர்களின் கூட்டணி மிகவும் வலிமையுடன் முன்னேற உள்ளதை காட்டுகிறது.

சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய டிவீட்டில், இதுவரையில் நான் செய்த அனைத்தும் இந்த அணியும், இலக்கையும் பிரிக்க கூடாது என்பதற்காக தான். ஞாயிற்றுக்கிழமை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தான் இணைந்ததும் தனது அணி மற்றும் இலக்கையும் இழக்க கூடாது என்பதற்காக தான்.
இப்போது ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் புதிய நிர்வாக குழு மற்றும் சத்ய நாடெல்லா-வின் சப்போர்ட் ஆகியவற்றுடன் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பெற்றபேற்க உள்ளேன். இதன் மூலம் மைக்ரோசாப்ட் உடன் வலிமையான கூட்டணியை உருவாக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார் சாம் ஆல்ட்மேன்.
இந்த பதிவை ரீடிவீட் செய்த மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்ய நாடெல்லா, ஓப்பன்ஏஐ நிர்வாக குழுவில் நடந்த மாற்றத்தை வரவேற்கிறோம். இப்புதிய மாற்றத்தில் நிலையான, வெளிப்படையான, மேம்பட்ட நிர்வாகத்தை உருவாக்குவது தான் முதல் படி.
சத்ய நாடெல்லா, சாம் ஆல்ட்மேன், கிரெக் பார்க்மேன் ஆகியோர் பேசி, இருவருக்கும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் முக்கியமான பணி இருப்பதை உணர்ந்து அவர்களை ஓப்பன்ஏஐ தலைமை பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். இதவேளையில் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர் மற்றும் பார்ட்னர்களுக்கும் வழங்கும் வகையில் வலிமையான கூட்டணியை உருவாக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதன் மூலம் ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இணைப்பு அதிகமாக உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் ஓப்பன்ஏஐ - மைக்ரோசாப்ட் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் மிகவும் பிரத்தியேகமானது, ஓப்பன்ஏஐ தொழில்நுட்பத்தை எவ்விதமான தடையும் இல்லாமல் நேரடியாக பயன்படுத்தும் வகையில் அமைய உள்ளது.
இதேபோல் ஓப்பன்ஏஐ நிர்வாகத்தில் மைக்ரோசாப்ட்-க்கு இருக்கும் அதிகாரம் வேறு யாருக்குமில்லை, இதேபோல் ஓப்பன்ஏஐ நிறுவன ஊழியர்கள் பெரும் ஆதிக்கம் செய்ய உள்ளனர். இந்த நிலையை மாற்ற கடந்த மாதம் ஓப்பன்ஏஐ நிறுவன ஊழியர்களிடம் இருக்கும் பங்குகளை சுமார் 86 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் விற்பனை செய்து புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிடப்பட்டது.
இதனால் மைக்ரோசாப்ட் அல்லாத Tiger Global, Thrive Capital and Sequoia Capital போன்றவை இந்த வாய்ப்பை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் சத்ய நாடெல்லா இதற்கு இடம் கொடுப்பாரா என்பதும் சந்தேகமே..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications