அமெரிக்கா: மைக்ரோசாப்ட் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா நிறுவனத்தில் தனக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஊதிய மட்டுமல்லாது அவருக்கு என கணிசமான ஈக்விட்டி பங்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவர் தன் வசம் இருந்த குறிப்பிட்ட சில பங்குகளை விற்பனை செய்திருப்பது ஒரு முதலீட்டு இணையதளம் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி அவர் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

சத்ய நாதெல்லா சுமார் 7,199 ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். ஒரு பங்கின் மதிப்பு 417 டாலர்கள் என்ற மதிப்பீட்டில் சத்தியநாநெல்லா விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக அவர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்துள்ளார். மல்டிபிள் ட்ரேட் என்ற நடைமுறையின் கீழ் அவரது பங்குகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் SEC இல் ஆவணத்தை தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக இது போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஈக்விட்டி பங்குகளில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வந்தால், அதனை பொதுவெளியில் அறிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அமெரிக்காவை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஆகும். ஒரு நிறுவனத்தில் 5% மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடிய அதிகாரிகள் அதனை விற்பனை செய்தாலோ அல்லது அதிகப்படுத்தினாலோ அரசிடம் தெரிவிக்க வேண்டும் என விதிமுறை கொண்டுள்ளது.
அதன்படி சத்ய நாதெல்லா தன்னுடைய பங்குகளை விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த விற்பனையை தொடர்ந்து தற்போது சத்ய நாதெல்லா வசம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திம் 7,86,000 பங்குகள் இருக்கின்றன. இந்த பங்கு விற்பனையின் மூலம் தனக்கு எந்த ஒரு பெனிபீஷியல் ஓனர்ஷிப்பும் கிடைக்கவில்லை என்பதையும் சத்ய நாதெல்லா அறிவித்துள்ளார்.
இது போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய உயர் பதவியில் இருக்கக்கூடிய நபர்கள் கணிசமான அளவு பங்குகளை விற்பனை செய்வது அல்லது வாங்குவது போன்ற நடவடிக்கைகள் அந்த நிறுவன பங்கின் மீது பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே இத்தகைய விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. சத்ய நாதெல்லாவின் தற்போதைய சொத்து மதிப்பு 7500 கோடி ரூபாய் ஆகும்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications