டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சமீபத்தில் தன்னிடம் இருந்து டெஸ்லா பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்தது முதலீட்டுச் சந்தையிலும், சக நிறுவனத் தலைவர்கள் மத்தியிலும் பெரும் விவாத பொருளானது மறக்க முடியாது.
இந்த நிலையில் தற்போது உலகிலேயே மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா கையில் இருந்து மைக்ரோசாப்ட் பங்குகளில் 50 சதவீதத்தை விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
சத்ய நாடெல்லா
பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய பின்பு சத்ய நாடெல்லா தலைமையில் மிகப்பெரிய வளர்ச்சியை மைக்ரோசாப்ட் பதிவு செய்துள்ளது. புதிய துறையில் வர்த்தக விரிவாக்கம், புதிதாக நிறுவன கைப்பற்றல், அரசு ஒப்பந்தங்கள், கிளவுட் சேவையில் பெரிய அளவிலான வளர்ச்சி எனப் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா தன்னிடம் இருந்த மைக்ரோசாப்ட் பங்கு இருப்பில் சுமார் 50 சதவீத பங்குகளை நவம்பர் 22 முதல் 24 வரையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் சத்ய நாடெல்லா 8,39,000 பங்குகளைச் சராசரியாக 342 டாலருக்கு விற்பனை செய்து மொத்தம் 287 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியுள்ளார்.
8.4 லட்சம் பங்குகள் விற்பனை
இதுகுறித்து மைக்ரோசாப்ட் சிஇஓ-வான சத்ய நாடெல்லா-வின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் நவம்பர் 22 முதல் 24 வரையில் சத்ய நாடெல்லா 8.4 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். தனது சொந்த நிதியியல் நிதி விஷயங்களுக்காகவும், பணத்தை
பல்வகைப்படுத்தவும் முடிவு செய்து 287 மில்லியன் டாலர் தொகையைத் திரட்டியுள்ளார்.
பங்கு இருப்பு அளவு
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரைக்கும் பங்கு இருப்பு அளவை சத்ய நாடெல்லா தாண்டியுள்ள காரணத்தாலும் இந்தப் பங்கு விற்பனை முக்கியமானது எனக் கருதி 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
சத்ய நாடெல்லா கையிருப்பு
சத்ய நாடெல்லா ஒவ்வொரு ஆண்டும் தனது பங்கு இருப்பில் சிறு பகுதியை முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விற்பனை செய்வது வழக்கம், ஆனால் தற்போது 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சத்ய நாடெல்லா இந்தப் பங்கு விற்பனைக்குப் பின்பும் 8,31,000 பங்குகளை வைத்துள்ளார்.
மைக்ரோசாப்ட் உயர் அதிகாரிகள்
சத்ய நாடெல்லா மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்களான பிராட் ஸ்மித், ஜட்சன் அல்தாஃப் ஆகியோரும் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது 2.5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டு உடன் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது.
புதிய வரி
மேலும் அமெரிக்காவில் தற்போது 2,50,000 டாலருக்கு அதிக மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் போது long-term capital gains tax ஆகச் சுமார் 7 சதவீத வரியை வருகிற ஜனவரி 1, 2022 முதல் வாஷிங்டன் மாநில அரசு விதிக்க உள்ளது. இதற்காகப் பல நிறுவனத் தலைவர்கள் அடுத்தடுத்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications