ஏஐ துறையில் பெரும் ஆதிக்கம் பெற்றுள்ள மைக்ரோசாப்ட் சமீபத்தில் தனது கேமிங் பிரிவில் 1900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து, நீண்ட கால வளர்ச்சிக்கு Activision Blizzard உடனான இணைப்பு மூலம் புதிய அடித்தளம் அமைத்துள்ளது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாடெல்லா தனது வருடாந்திர பயணத்தின் ஒரு பகுதியாகப் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு வருகிறார்.

மைக்ரோசாப்ட் எதிர்காலம் ஏஐ தான் என்பது உறுதியாகிவிட்ட வேளையிலும், இந்தியாவில் அலுவலகம், டேட்டா சென்டர் ஆகியவற்றைத் தொடர்ந்து நிறுவி வருகிறது. இந்த நிலையில் சத்ய நாடெல்லா தனது இந்திய பயணத்தில் AI ஸ்டார்ட்அப்களைச் சந்தித்து இத்துறையில் புதிய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
சத்ய நாடெல்லா-வின் இந்திய பயணத்தில் கட்டாயம் இந்தியாவுக்கான பெரிய திட்டம் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்தப் பயணத்தில் சத்ய நாடெல்லா AI துறையில் புதிய வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பது குறித்தும், சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் உரையாற்றுவார் என்று இந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனித் சந்தோக், சில வாரங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சத்ய நாடெல்லா வருகை குறித்தும், அவருடைய திட்டம் குறித்துத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மைக்ரோசாப்ட் சமீபத்தில் அனைவரும் ஆச்சரியம் அடையும் வகையில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டியது. ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டிய இரண்டாவது நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது.
மைக்ரோசாப்ட் அதன் 48 வருட வரலாற்றில் முதல் முறையாக 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டியது, அதுவும் இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையில் தொட்டு உள்ளது கூடுதல் சிறப்பு. ஆப்பிள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு $3 டிரில்லியன் சந்தை மதிப்பீட்டை எட்டியது.


Click it and Unblock the Notifications