சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சர்வீசஸ் தொடர்பான மோசடி வழக்கில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி நவம்பர் 30 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய ஐடி துறையின் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாகவே பார்க்கப்படும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி செபியின் உத்தரவு மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதித்த 624 கோடி ரூபாய் நிதியை ஆறு தரப்பினர் ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.

செபி உத்தரவில் இடம்பெற்றுள்ள 5 பேர் மற்றும் ஒரு நிறுவன பட்டியல்:
பி ராமலிங்க ராஜு (சத்யத்தின் முன்னாள் தலைவர்)
பி ராம ராஜு (முன்னாள் எம்டி)
பி சூரியன்ராய ராஜு (ராமலிங்கம் ராஜுவின் சகோதரர்)
எஸ்ஆர்எஸ்ஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (சத்யம் ப்ரோமோட்டர்களால் இயக்கப்படும் நிறுவனம்)
வி ஸ்ரீனிவாஸ் (முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி)
ஜி ராமகிருஷ்ணா (முன்னாள் துணைத் தலைவர் - நிதி)
இந்த 6 தரப்பிரனும் சட்டத்திற்குப் புறம்பாக 624 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர் என உறுதியான நிலையில், வட்டியுடன் சேர்த்து தற்போது மொத்தத் தொகையாக சுமார் 1,747.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.இதில், சட்டத்திற்குப் புறம்பான ஆதாயமான ரூ.624 கோடியுடன், 15 ஆண்டுகளுக்கான வட்டித் தொகை ரூ.1,123 கோடி அடங்கும்.
இந்த உத்தரவை தொடர்ந்து பிப்ரவரி 2, 2023 அன்று செக்யூரிட்டி ஆர்பிட்ரேஷன் ட்ரிப்யூனல் (SAT) உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதித்த 624 கோடி ரூபாய் நிதியை தனித்தனியாக ஆதாயம் அடைந்தவர்கள் கணக்கிட்டால் பி.ராமலிங்க ராஜு ரூ.20.43 கோடியும், பி.ராமராஜூ ரூ.20.43 கோடியும், பி.சூரியன்ராயன ராஜு ரூ.51.44 கோடியும் ஆதாயம் அடைந்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து எஸ்ஆர்எஸ்ஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் ரூ.518.36 கோடியும், வி ஸ்ரீனிவாஸு ரூ.9.58 கோடியும், ஜி ராமகிருஷ்ணா ரூ.3.83 கோடியும் சட்டவிரோத சம்பாதித்துள்ளனர். இதில் வட்டித் தொகையான ரூ.1,123 கோடி இல்லை.
செபி உத்தரவின் படி அடுத்த 45 நாட்களுக்குள் தொகையை செலுத்த உத்தரவிட்டு உள்ளது. மேலும் பி ராமலிங்க ராஜு மற்றும் பி ராம ராஜு ஆகியோர் 2028 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி வரையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் செபி கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications