நாட்டின் குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் சத்யநாராயணன் நுவாலும் ஒருவர். 1995 ஆம் ஆண்டில் சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது அயராத உழைப்பு, விடாமுயற்சி, சிரமங்களைத் தாக்குப்பிடித்தது ஆகியவற்றால் இன்றைக்கு அவரது தொழிலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா என்ற ஊரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் சத்யநாராயண் நுவால். அவரது தந்தை ஓர் அரசு ஊழியர், மகனும் அப்படியே ஆக வேண்டும் என்று தந்தை விரும்பினார்.

ஆனால் நுவாலுக்கு அதில் நாட்டமில்லை. ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்கி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார். அந்தக் கனவு கிட்டத்தட்ட அவரது 18 ஆவது வயதில் நிறைவேறியது எனலாம்.
முதன்முதலில் அவர் தொடங்கிய தொழில் சரிவரப் போகவில்லை. இதையடுத்து அவர் பல்வேறு தொழில்களைச் செய்து பின்னர் இன்றைக்கு ரூ.36,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
நுவாலின் வாழ்க்கையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள். ஒருகட்டத்தில் கையில் பணம் இல்லாமல் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் தூங்கி இரவுப் பொழுதைக் கழித்தார் தனது பள்ளிப்படிப்பை 10 வகுப்புடன் நிறுத்திக் கொண்டார். காரணம் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு அவரது தலையில் விழுந்தது. அவரது தந்தை 1971 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் குடும்பம் சிரமத்தில் தள்ளாடத் தொடங்கியது.
1997 ஆண் ஆண்டில் நுவாலுக்கு 19 வயது இருக்கும்போது திருமணம் செய்து கொண்டார். பின்னர் மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டம் பல்ஹர்ஷா என்ற ஊருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் அப்துல் சத்தார் அல்லாபாய் என்பவரை சந்தித்தார், அப்துல் சத்தார் கிணறு தோண்டுவதற்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும், சுரங்கம் தோண்டுவதற்காகவும் வெடிமருந்துகளை விற்று வந்தார்.
சில மாதங்கள் கடந்த பின்னர் அப்துல் சத்தாருக்கு மாதம் ரூ.1000 தந்துவிட்டு அவருடன் சேர்ந்து ஒரு தொழிலைத் தொடங்கினார். தொடக்கத்தில் சத்தாருக்குப் பணம் கொடுத்து வெடிமருந்து லைசன்ஸைப் பயன்படுத்தி வெடிப்பொருட்களை வாங்கி விற்று வந்தார்.
அந்தச் சமயத்தில் தான் பிரிட்டிஷ் நிறுவனமான இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸின் பார்வை நுவால் மீது பட்டது. அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் யோகம் தான். நுவாலின் கம்பெனி இப்போது எல்லாவித வெடிப் பொருட்கள், கிரேனேடு லாஞ்சர்கள், டிரோன்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை இந்தியா மிஷன் திட்டத்தின் கீழ் தயாரிக்கத் தொடங்கியது.
இதனிடையே சோலார் தொழிலின் மதிப்பு மார்க்கெட்டில் அதிகரித்தது. பத்தாண்டுகளுக்குள் 1700 சதவீதம் உயர்ந்தது. 2012 ஆம் ஆண்டில் 1,765 கோடியாக இருந்த வியாபாரம் 2022 ஆம் ஆண்டு நவம்பரில் ரூ.35,000 கோடியாக அதிகரித்தது. நுவாலின் நிகர சொத்து மதிப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் ரூ.19,000 கோடி.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications