சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோ, தனது ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தை திங்கள்கிழமை முன்னெச்சரிக்கையாக காரணமாக மூடியுள்ளது. இந்த திடீர் முடிவுக்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் ஈரான் நாட்டின் சமீபத்திய டிரோன் அட்டாக்.
அமெரிக்க தளங்களை தாக்குவதற்காக ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலை 96 சதவீதத்திற்கும் அதிகமாவை வானிலேயே தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மட்டுமே சேதம் ஏற்படுத்துகிறது, மற்றவை வானில் தாக்கப்பட்டு உடைந்து விழும் பாகங்கள் மூலம் ஏற்படும் பாதிப்பு மட்டுமே. மேலும் UAE, சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்கள் வானில் பறக்கும் ஏவுகணை மற்றும் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகளை வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அராம்கோ ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பிடித்ததாக ராய்ட்டர்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் நிறுவனங்கள் தெரிவித்து நிலையில், தற்போது மூடப்பட்டு உள்ளது. இந்த சுத்திகரிப்பு ஆலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளது. ஆனால் அராம்கோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
சமூக ஊடகங்களில் பரவும் சில வீடியோக்களில், அராம்கோ-வின் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கருப்பு புகை பெரிதாக எழுவது தெரிகிறது. இதுவரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இந்த நிலையில் சவுதி ஆரம்கோ சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்ட செய்தி வெளியானதும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.32% உயர்ந்தது. பின்னர் சற்று குறைந்து ஒரு பேரலுக்கு 77.51 ஆக குறைந்துள்ளது, இது 7% உயர்வாகும்.
ஹார்முஸ் பாதை
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் பதிலடி கொடுத்ததால் ஹார்முஸ் நீர்வழி பாதை மூடப்படும் அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே இவ்வழியில் சென்ற ஒரு கப்பல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருக்கும் வேளையில் திங்களன்று பிரெண்ட் கச்சா விலை 13% உயர்ந்து ஜனவரி 2025க்குப் பிறகு உச்சத்தை தொட்டது. பின்னர் சற்று குறைந்தாலும்.
மேலும் ஈரான் ஹார்முஸ் பாதை மூடவில்லை என்று அறிவித்த போதிலும், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தாங்களாகவே இப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். உலகின் 10% கச்சா எண்ணெய் மற்றும் 20% ஜெட் எரிபொருள் இந்த பாதையில் செல்கிறது என்று Kpler நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பாதை உளகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் டைம்ஸிடம் அளித்த பேட்டியில், ஈரான் மீதான தாக்குதலை தேவைப்பட்டால் "நான்கு முதல் ஐந்து வாரங்கள்" தொடர்வோம் என்று கூறியுள்ளார். இஸ்ரேலுடன் இணைந்து இந்த தாக்குதலின் தீவிரத்தை எளிதாக தக்கவைக்க முடியும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலால் சவுதி அராம்கோவின் ராஸ் தனுரா நிலையம் மூடப்பட்டுள்ளது. இது உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரெண்ட் கச்சா விலை 12% வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications