சவுதி அரேபியா அரசு 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் (இஸ்லாமிய ஆண்டு 1447 ஹிஜ்ரி) சீசனுக்கான விசாக்களை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வழங்கத் தொடங்கியுள்ளது. இது வழக்கமான கால அட்டவணையை விட மிக முன்னதாக நடைபெறுவதால், லட்சக்கணக்கான ஹஜ் பயணிகளின் வருகைக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் சீராகவும், பாதுகாப்பாகவும் முடிக்க வேண்டும் என்ற சவுதி அதிகாரிகளின் திட்டமிட்டு உள்ளதை காட்டுகிறது. ஹஜ் உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான புனித தலங்களில் ஒன்று என்பதால், இந்த முன்கூட்டிய தயாரிப்பு பணிகள், பயணிகளுக்கு மிகுந்த நன்மை தரும்.
ஏன் இவ்வளவு முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்?
ஹஜ் பயணத்தை நிர்வகிப்பது மிகப் பெரிய சவாலாகும். லட்சக்கணக்கான மக்களின் பயண ஏற்பாடு, தங்குமிடம், போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி, கூட்ட நிர்வாகம், பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் சீராக செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும், பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கவும் சவுதி அரசு இந்த ஆண்டு முன்கூட்டியே தயார் பணியாகளை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஹஜ் பயண சீசனை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என எதிரபார்க்கப்படுகிறது.

விசா வழங்கல் மற்றும் முக்கிய கால அட்டவணை
பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஹஜ் 2026-க்கான விசாக்கள் வழங்கப்படத் தொடங்கியுள்ளன. இதனால் பயணிகளும், ஹஜ் ஏஜென்சிகளும் ஆவணங்களை முடித்து, பயணத் திட்டமிடல்களை சீராகச் செய்ய அதிக நேரம் கிடைக்கிறது.
சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள ஹஜ் அலுவலகங்களுக்கு விரிவான இயக்கக் கால அட்டவணையை (operational calendar) வெளியிட்டுள்ளது. இதில் பதிவுகள் எப்போது முடிக்க வேண்டும், ஒப்பந்தங்கள் எப்போது கையெழுத்திட வேண்டும், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து எப்போது இறுதி செய்ய வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாஸ்டர் டைம்டேபிள் போன்ற அட்டவணை அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்க உதவுகிறது.
பணிகள் எப்போதே தொடங்கின?
விசா வழங்கல் இப்போது தொடங்கினாலும், இந்த ஹஜ் சீசனுக்கான பணிகள் மிகவும் முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டன. 2025 ஜூன் 8-ஆம் தேதி (1446 ஹிஜ்ரி துல்ஹஜ் 12) முதல் ஆரம்ப ஆவணங்கள் உலகெங்கிலும் உள்ள ஹஜ் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இதனால் ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிடல் தொடங்கியுள்ளது. இது சவுதி அரசின் தொலைநோக்கு திட்டத்தின் (Vision 2030) பகுதியாகும்-ஹஜ் சேவைகளை மேம்படுத்தி, பயணிகளின் அனுபவத்தை உயர்த்துவது.
நுஸ்க் மசார் (Nusk Masar) டிஜிட்டல் தளம்
சவுதி அரசு உருவாக்கிய நுஸ்க் மசார் என்ற டிஜிட்டல் தளம் ஹஜ் ஏற்பாடுகளை எளிதாக்குகிறது. இந்த தளத்தில் மினா, அரபத், முஸ்தலிபா ஆகிய இடங்களில் உள்ள இருப்பிடம் வசதிகள் போன்ற விவரங்கள் காட்டப்படுகின்றன. ஹஜ் அலுவலகங்கள் இந்த தகவல்களை முன்கூட்டியே பெற்றுள்ளன. இதனால் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து திட்டமிடலுக்கு அதிக நேரம் கிடைத்துள்ளது.
பதிவு நிலவரம் மற்றும் ஏற்பாடுகள்
இதுவரை சுமார் 7.5 லட்சம் (750,000) பேர் ஹஜ் 2026-க்கு பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 30,000 பேர் தங்கள் நாடுகளிலிருந்து நேரடியாக பதிவு செய்துள்ளனர். இந்த ஆரம்ப பதிவு கூட்ட அளவு, தங்குமிட தேவை, போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கணக்கிட உதவுகிறது. ஏற்கனவே சர்வதேச பயணிகளுக்காக 485 கூடாரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 73 ஹஜ் அலுவலகங்கள் அடிப்படை ஒப்பந்தங்களை முடித்துள்ளன. மக்கா மற்றும் மதீனாவில் தங்குமிடம், சேவைகள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.
பயணிகளுக்கு என்ன நன்மை?
இந்த முன்கூட்டிய தயாரிப்புகள் கடைசி நேர குழப்பங்களைத் தவிர்க்கும். மருத்துவ சேவை, போக்குவரத்து, கூட்ட நிர்வாகம் ஆகியவை சிறப்பாக செயல்படும். முதல் குழு பயணிகள் ஏப்ரல் 18, 2026 முதல் வரத் தொடங்குவர். இந்த ஆரம்ப திட்டமிடல் பயணிகளுக்கு பாதுகாப்பான, சீரான, அமைதியான ஹஜ் பயண அனுபவத்தை உறுதி செய்யும். ஹஜ்-க்கு பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் இப்போதே ஆவணங்களைத் தயாரித்து, நம்பகமான ஏஜென்சிகள் மூலம் பதிவு செய்வது நல்லது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications