அமெரிக்கா - சவுதி அரேபியா மத்தியிலான வர்த்தக உறவு மிகவும் முக்கியமானது, கடந்த 10 வருடத்தில் தான் சோலார் எனர்ஜியும், எலக்ட்ரிக் வாகனங்களும் தலைதூக்கியுள்ளது. இதற்கு முன்பு வரையில் மொத்தமும் கச்சா எண்ணெய் சார்ந்து தான் இருந்தது.
இப்படியிருக்கும் போது அமெரிக்கா - சவுதி அரேபியாவும் முக்கியமான ஒப்பந்தம் செய்து, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

80 ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட்ட பெட்ரோடாலர் ஒப்பந்தத்தை, சவுதி அரேபியா 50 ஆண்டுக்கால முடிவில் புதுப்பிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9 ஆம் தேதி இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.
1974 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம், உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முக்கிய பங்காற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் எதற்காக..? இது எப்படி அமெரிக்கா - சவுதி அரேபியாவுக்கு பலன் அளித்தது..?
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சவுதி அரேபியாவின் ராணுவத் தேவைகளுக்கான கூட்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அதாவது சவுதி அரேபியா விற்பனை செய்யும் எண்ணெய்க்கு டாலரில் பேமெண்ட் பெற வேண்டும் என்றும், இதற்கு மாறாக சவுதிக்கு தேவையான ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா தள்ளுபடி விலையில் கொடுக்கும் என்பது தான் டீல்.
அமெரிக்க அதிகாரிகள், இதன் மூலம் சவுதி அரேபியா அதிகளவிலான எண்ணெய் உற்பத்தியை ஊக்குவித்து, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் போது அதற்கு டாலர் பேமெண்ட் பெற வைத்தது. இதன் மூலம் டாலருக்கு டிமாண்ட் உலகளவில் அதிகரித்து டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா - அரபு நாடுகளுடனான பொருளாதார உறவுகள் பெரிய அளவில் வலிமை பெற்றது.
இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது மூலம், இனி சவுதி அரேபியா உற்பத்தி செய்யும் எண்ணெய் மற்றும் பிற பொருட்களை அமெரிக்க டாலர்கள் மட்டுமல்லாமல், சீன யுவான் (RMB), யூரோ, ஜப்பானிய யென் போன்ற பல்வேறு நாணயங்களில் வர்த்தகம் செய்ய முடியும். இதனால் ஆசியச் சந்தையைத் தாண்டி வளைகுடா நாடுகளிலும் டாலர் ஆதிக்கம் குறையத் துவங்கியுள்ளது.
அதேபோல், சவுதி அரேபியா அரசு டாலரை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்ற முக்கிய இலக்குடன் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களையும் வர்த்தகத்திற்குப் பயன்படுத்தும் முறைகளையும், வாய்ப்புகளையும் ஆய்வு செய்து வருகிறது.
1972 ஆம் ஆண்டு, அமெரிக்கா தனது நாணயத்தைத் தங்கத்துடன் இணைப்பதை நிறுத்திய பின்னர், கொண்டு வந்தது தான் இந்த பெட்ரோடாலர் ஒப்பந்தம், சவுதி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிய நிலையில் அமெரிக்காவுக்கு இது பெரும் பின்னடைவாகும். இதனால் இனி டாலர் ஆதிக்கமும் குறையும்.
அமெரிக்கா - சவுதி அரேபியா மத்தியிலான பெட்ரோடாலர் ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து சந்தையில் அதிகப்படியான டாலர் இருப்பு இருக்கும், இதேபோல் சவுதி-யிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் அனைத்தும் பிற நாணயங்களைப் பயன்படுத்தும். இதன் வாயிலாக டாலர் மதிப்பு சரிய கூடும், இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தவோ அல்லது அதிகப்படியான அளவிலேயே வைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், டிஜிட்டல் நாணயத்தை உலகளவிலான வர்த்தகத்தில் பயன்படுத்துவது குறித்து ஆராயும் மத்திய வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளுக்கிடையேயான ஒரு கூட்டு முயற்சி திட்டமான 'Project mBridge' உருவாக்கப்பட்டது. இதில் சவுதி அரேபியா-வும் இணைந்துள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம், Distributed ledger technology-ஐ பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளையும், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் கரன்சி மூலம் எளிதாக்குவதாகுவது தான்.
2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 'Project mBridge' திட்டத்தில் உலகளவில் பல முக்கிய மத்திய வங்கிகளும் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பொருளாதார கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications