சவுதி அரேபியா கச்சா எண்ணெய் மூலம் ஒவ்வொரு நாளும் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்து வருவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் பொருளாதார வேகத்தை கட்டுப்படுத்தும் பவர் கொண்டு உள்ளது. சவுதி அரேபியா அரசு முதலீட்டு நிறுவனங்களும் சரி, சவுதி நாட்டு பணக்காரர்களும் சரி கச்சா எண்ணெய் தாண்டி பல துறையில் பல பில்லியன் டாலர்களை நீண்ட காலமாக முதலீடு செய்து வருகின்றனர்.

இப்படி சவுதி அரேபியா தனது முதலீட்டு பாதையையும், வருவாய் ஆதாயத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் கால்பந்து மற்றும் கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுகளில் பல மறுப்பட்ட முதலீடுகளை செய்து வெற்றிக்கண்டு உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் லாபகரமான கட்டமைப்பாக விளங்கும் இந்தியன் பிரீமியர் லீக்-ல் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள், ஐபிஎல் அதிகாரிகளை இந்த கட்டமைப்பை 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது ஆலோசனை வழங்கியுள்ளது.
செப்டம்பர் மாதம் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்த போது, ஐபிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முதல் கட்ட பேச்சுவாரத்தில் சவுதி அரேபியா அரசு இங்கிலீஷ் பிரீமியர் லீக் அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கைப் போலவே, ஐபிஎல் அமைப்பில் சுமார் 5 பில்லியன் டாலரை முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து, ஐபிஎல் கட்டமைப்பை பிற நாடுகளுக்கும், விரிவாக்கம் செய்ய உதவ தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியா அரசு ஐபிஎல் அமைப்பில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக முடிவு செய்தாலும், இந்திய அரசும், கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பான பிசிசிஐ இதுக்குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
அடுத்த வருடம் பொது தேர்தலுக்குப் பிறகு சவுதி அரேபியாவின் முதலீட்டு விருப்பத்தை அடிப்படையாக வைத்து ஐபிஎல்-ஐ ஒரு ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிசிசிஐ அமைப்பின் தலைவராக இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அமைப்பை 30 பில்லியன் டாலருக்கு மதிப்பிட்டால் இந்திய ரூபாய் மதிப்பின் படி கிட்டதட்ட 2.5 லட்சம் கோடி ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications