கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

ஹவுதி படைகளால் சவுதி அரேபியாவின் கிழக்கு - மேற்கு பைப்லைன் திட்டம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மொத்தமாக முடங்கியது. இந்த நிலையில் சவுதி ஆராம்கோ தனது எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்றுத் திட்டத்தை உருவாக்கியது, இதன் அடிப்படையில் ஒமான் மற்றும் இதர வளைகுடா நாடுகளின் துறைமுகத்தில் இருந்து சவுதி ஆராம்கோ சுமார் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை 7 பெரும் எண்ணெய் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் லோடு செய்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் படைகள் மொத்தமாக முடக்கிய நிலையில், கடந்த 6 மாதங்களாகச் செங்கடலில் இருக்கும் சவுதி துறைமுகத்தின் வழியாக கிழக்கு - மேற்கு பைப்லைன் மூலம் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

ஆனால் ஹவுதிகள் யெமன் நாட்டில் இருந்து தாக்குதலைத் துவங்கிய பின்பு திட்டமிட்டபடி பாம் அல் மண்டெப் வழித்தடத்தில் இருக்கும் முக்கிய துறைமுக நகரமான மோகா துறைமுக நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பெர்சியன் வளைகுடாவின் எண்ணெய் உற்பத்தி வயல்களை மேற்கு பகுதியில் இருக்கும் செங்கடலை இணைக்கும் கிழக்கு - மேற்கு பைப்லைன் மீது திட்டமிட்டுத் தாக்கியது ஈரான் ஆதரவில் இயங்கும் ஹவுதி படைகள்.

இந்த தாக்குதலுக்கு பின்பு சவுதி ராணுவமும், யெமன் நாட்டின் அரசு அதாரவு படைகளும் இணைந்து ஹவுதி படைகளை மீது கடுமையாக தாக்கி வருகிறது. இந்த தாக்குதலுக்கு மத்தியில் சவுதி அரேபியா Ras Tanura துறைமுகத்தில் லோடு செய்துள்ளது.

இது சந்தைக்கு வரும் பட்சத்தில் போதுமான சப்ளை உறுதி செய்யப்பட்டும், சவுதியும் மற்ற வளைகுடா நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய துவங்கிய காரணத்தால் 109 வரை சென்ற பிரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது 101 டாலர் வரையில் குறைந்துள்ளது.

Ras Tanura துறைமுகம் பெர்சியன் வளைகுடாவில் இருக்கும் காரணத்தால் சவுதி தினமும் 2.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் சவுதி மீண்டும் ஹார்முஸ் வழித்தடத்தை மட்டுமே நம்பி இயங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

யான்பு துறைமுகத்தில் ஏற்றுமதி தடைப்பெற்று உள்ளதால் தற்போது சவுதியில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் தடைபெற்றது, இதனால் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+