இந்தோனேசியா ஜி20 கூட்டம்: முகமது பின் சல்மான் இந்திய பயணம் ரத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், நவம்பர் 15-16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமை முகமது பின் சல்மான் இந்தியா வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்குக் காரணமாக ஜி20 மாநாட்டில் முகமது பின் சல்மான் கலந்துகொள்ள வேண்டிய கூட்டங்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால் நேரமின்மை காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு மற்றொரு நாள் இந்திய பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. கொடிக்கொடுத்த சீனா, சவுதி அரேபியா..! பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. கொடிக்கொடுத்த சீனா, சவுதி அரேபியா..!

எஸ். ஜெய்சங்கர்

எஸ். ஜெய்சங்கர்

கடந்த மாதம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சவுதி அரேபிய நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட போது முகமது பின் சல்மான்-க்கு இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஜி20 மாநாட்டிற்கான பயணத்தின் போது சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போகு இச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா - சவுதி அரேபியா

இந்தியா - சவுதி அரேபியா

இந்தியா - சவுதி அரேபியா மத்தியிலான வர்த்தகம் மற்றும் நடப்புறவு பல வருடங்களாக இருக்கிறது.  குறிப்பாக கச்சா எண்ணெய் சார்ந்த இறக்குமதியில் சவுதி அரேபியா-வை இந்தியா அதிகம் நம்பியுள்ளது என்றால் மிகையில்லை.

ஆனால் சமீபத்தில் ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் அதிகமான நிலையில் இந்திய எண்ணெய் சப்ளையர்கள் பட்டியலில் சவுதி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இதற்கிடையில் கொரோனா தொற்று காலத்தில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிந்த காரணத்தால் சவுதி அரேபியா வர்த்தகம், பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் சவுதி அரேபியா தனது பொருளாதாரத்தை இனியும் கச்சா எண்ணெய்யை மையமாக வைத்து மட்டும் கட்டமைக்கக் கூடாது என்ற முடிவில் உறுதியாக உள்ளுது.

இக்காரணத்தால் இந்தியா- சவுதி அரேபியா மத்தியிலான வர்த்தக வாய்ப்பு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. பல இந்திய நிறுவனங்கள் சவுதியில் வர்த்தகம் துவங்க ஆர்வம் காட்டி வருகிறது.

அமெரிக்கா கோரிக்கை

அமெரிக்கா கோரிக்கை

ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பல நாடுகளுக்கு முடக்கியுள்ள நிலையில், சவுதி அரேபியா தனது உற்பத்தியை அதிகரித்துக் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கோரிக்கைவைத்த நிலையில் OPEC+ அமைப்பின் உற்பத்தி குறைப்புக்கு எவ்விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.

முகமது பின் சல்மான்

முகமது பின் சல்மான்

சவுதி அரேபியா நாட்டின் சக்தி வாய்ந்த தலைவராகவும், இளவரசராகவும் இருக்கும் முகமது பின் சல்மான் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் நடைபெற்ற உள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

G20 நாடுகள்

G20 நாடுகள்


G20 நாடுகள் என்பது அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கியது.

G20 Presidency பதவி

G20 Presidency பதவி

ஜி20 கூட்டத்திற்கான தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டுக்கு G20 Presidency பதவி தற்காலிகமாக அளிக்கப்படும். அந்த வகையில் இந்தியாவுக்கு டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரையில் சுமார் வருட காலத்திற்கு இந்தியாவுக்கு G20 Presidency பதவி கிடைக்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா தலைமையில் சுமார் 200க்கும் அதிகமான மாநாடுகள் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நடக்க உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டிற்கான லோகோ, தீம், இணையத்தளத்தை அறிமுகம் செய்தார்.

லோகோ, தீம்

லோகோ, தீம்

இந்தியாவில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஜி20 கூட்டத்திற்கான லோகோவில் தாமரை மற்றும் 'வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற வாக்கியம் இடம்பெற்றது. இதை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகச் செய்து வைத்த நிலையில், தாமரை நம்பிக்கையின் சின்னம் என்று பேசினார் பிரதமர் மோடி.

தாமரை

தாமரை


இந்த நிலையில் பிரதமர் மோடி G20 லோகோவில் உள்ள தாமரையின் சின்னம் இந்தக் காலத்தில் நம்பிக்கையின் பிரதிபலிக்கும். எத்தனை பாதகமான சூழல்கள் வந்தாலும் தாமரை மலரும் என மோடி இக்கூட்டத்தில் பேசினார்.

வசுதைவ குடும்பம் விளக்கம்

வசுதைவ குடும்பம் விளக்கம்

இதில் இடம்பெற்றுள்ள வசுதைவ குடும்பம் அதாவது முழுப் பூமியும் ஒரு குடும்பம் என்னும் நம்முடைய எண்ணத்தை இந்த லோகோ பிரதிபலிக்கிறது, இதன் மூலம் இந்தியா உலகளாவிய நல்லிணக்கத்தை நம்புகிறது என்று பிரதமர் விளக்கினார். தாமரை மலர் நமது புராண பாரம்பரியத்தை குறிக்கிறது என்று அவர் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி20 கூட்டத்திற்கான தலைவர் பதவி அடுத்த ஆண்டு இந்தியாவுக்குக் கிடைக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உலகளாவிய கொள்கைகள், வரி விதிப்பு மற்றும் கடன் நெருக்கடி போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia Crown Prince Mohammed Bin Salman to reschedule India visit during Indonesia G20 Summit

Saudi Arabia Crown Prince Mohammed Bin Salman to reschedule India visit during Indonesia G20 Summit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X