உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக இருக்கும் சவுதி அரேபியா ஜூலை மாதம் துவக்கம் முதல் ஒரு நாளுக்கு 1 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்து அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 78.42 டாலராக உயர்ந்த நிலையில், 2.29 டாலர் கிட்டதட்ட ஒரே நாளில் 3 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 78.73 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 74.01 டாலரில் இருந்து 75.06 டாலராக உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியா நாடு மே மாதத்தில் சுமார் ஒரு நாளுக்கு 10 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்த நிலையில் ஜூலை மாதம் முதல் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் குறைத்து வெறும் 9 மில்லியன் பேரல்களை மட்டுமே ஒரு நாளுக்கு உற்பத்தி செய்வதாக சவுதி அரேபிய நாட்டின் எரிசக்தி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு மற்றும் ரஷ்யா உள்ளிட்ட அநைப்பின் நட்பு நாடுகளின் பரந்த ஒப்பந்தத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்குள் விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் தான் சவூதி அரேபியா அரசு தானாக முன் வந்து சவுதி அரேபியா 10 லட்சம் பேரல் உற்பத்தியை குறைத்துள்ளது.
OPEC+ என அழைக்கப்படும் அமைப்பில் இருக்கும் நாடுகள் மட்டும் உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் 40 சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள உற்பத்தி குறைப்பு மூலம் சுமார் 3.66 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தி ஒரு நாளுக்கு குறைக்கப்பட்டு உள்ளது. இது உலகளாவிய தேவையில் சுமார் 3.6 சதவீதமாகும்.


Click it and Unblock the Notifications