ஜியோ ஃபைபரில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வது குறித்து சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் (Public Investment Fund - PIF) என்கிற அமைப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேசத் தொடங்கி இருக்கிறார்களாம்.
இந்த சவுதி அரேபியா, தன்னுடைய 300 பில்லியன் டாலர் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்கும் வேலையில் இருக்கிறார்கள். சவுதி அரேபியாவின் போர்ட்ஃபோலியோவில் இருந்த ஐடி கம்பெனிகள், பெரிய எண்ணெய் நிறுவனங்கள், ஏவியேஷன் கம்பெனி போன்றவைகளில் முதலீடு செய்திருந்ததை பிராபிட் புக்கிங் செய்து இருக்கிறார்களாம். அதோடு இங்கிலிஷ் பிரீமியர் லீக் கிளப் முதலீடுகளில் இருந்தும் பணத்தை வெளியே எடுத்து இருக்கிறார்களாம்.

அபுதாபி முதலீட்டு ஆணையம் (ஏடிஐஏ), ஜியோ ஃபைபரில் சுமாராக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்வது குறித்து, முன்பே பேசத் தொடங்கிவிட்டார்களாம். அதன் பிறகு தான் சவுதி அரேபியாவின் பி ஐ எஃப் ஃபண்ட் சார்பாக ஜியோ ஃபைபரில் முதலீடு செய்வது தொடர்பாக பேசத் தொடங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சவுதி அரேபியாவின் பி ஐ எஃப் ஃபண்டின் முதலீடுகள் குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ அல்லது, பி ஐ எஃப் ஃபண்ட் தரப்பில் இருந்தோ எதையும் சொல்லவில்லை என்கிறது எகனாமிக் டைம்ஸ்.
முகேஷ் அம்பானி, தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம் பங்குகளை மட்டும் விற்று, கடந்த சில மாதங்களில் மட்டும், சுமாராக 20.8 பில்லியன் டாலர் நிதி திரட்டினார்.
அதில் ஃபேஸ்புக் உட்பட பல கம்பெனிகளும் முதலீடு செய்தார்கள். அபுதாபியின் ADIA மற்றும் சவுதி அரேபியாவின் PIF இரண்டும் மொத்தம் 2.2 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இந்த ஜியோ ஃபைபர் முதலீடு நடந்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனிக்கும், சவுதி அரேபியாவுக்குமான உறவு இன்னும் நல்ல முறையில் மேம்படும் என எதிர்பார்க்கலாம். காரணம் சவுதி அராம்கோ.
சவுதி அரம்கோ கம்பெனி, ஏற்கனவே ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வியாபாரத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவது இங்கு நினைவு கூறத்தக்கது.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications