ரஷ்யா-விடம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் இன்னும் முடியாத நிலையில், இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் எரிவாயு சப்ளையை நிறுத்தும் வகையில் பராமரிப்பு பணிகளைச் செய்து வரும் ரஷ்யாவுக்கு, சவுதி அரேபியா பெரிய உதவி செய்து வருகிறது.

 

உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் ரஷ்யா-வின் எனர்ஜி வர்த்தகம் தடைப்படும் நேரத்தில், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கும் சவுதி அரேபியா இரண்டாவது காலாண்டில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் நடந்தது என்ன..? விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் நடந்தது என்ன..?

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

சவுதி அரேபியா ஏப்ரல் முதல் ஜூன் வரை 647,000 டன் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது என ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகிறது.

எஸ்டோனிய துறைமுகம்

எஸ்டோனிய துறைமுகம்

சவூதி அரேபியா ரஷ்ய மற்றும் எஸ்டோனிய துறைமுகங்களில் இருந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்கியுள்ளது, மேலும் 2021 அளவுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவிலிருந்து 320,000 பீப்பாய்களைச் சவுதி இறக்குமதி செய்துள்ளது.

உக்ரைன் மீதான போர்

உக்ரைன் மீதான போர்

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யா உடனான உறவையும், வர்த்தகத்தையும் எளிதாகத் துண்டிக்கக் கூடிய உயர்ந்த எண்ணெய் வளத்துடன் இருக்கும் சவுதி அரேபியா, ரஷ்யா உடனான உறவை மேம்படுத்தும் வகையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்ட பின்பும் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கியுள்ளது.

ஜோ பைடன்
 

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் சவுதி அரேபியா-வுக்கு அரசு முறை பயணமாகச் சென்றார், உலக நாடுகளில் பணவீக்கம் தலைவிரித்தாடும் நிலையில் இந்தப் பயணம் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் பயணத்தில் எண்ணெய்க்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்குச் சாதகமாக வராது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா திட்டம்

சவுதி அரேபியா திட்டம்

கோடை காலத்தில் சவுதி அரேபியாவில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ பவர் கிரிட்-ல் செலவு செய்யும், இந்த வேளையில் ரஷ்யா தள்ளுபடி விலையில் கொடுக்கும் கச்சா எண்ணெய்-யை இதற்குப் பயன்படுத்தி விட்டு, தான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தையில் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து உள்ளது.

எண்ணெய் தேவை

எண்ணெய் தேவை

சவூதி அரேபியா பொதுவாகக் கோடையில் ஒரு நாளைக்கு 600,000 பீப்பாய்கள் மற்றும் குளிர்காலத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 300,000 பீப்பாய் எண்ணெய்யை பவர்கிரிட்-ல் பயன்படுத்துகிறது. இந்த அதிகப்படியான தேவையை ரஷ்ய எண்ணெய் பூர்த்திச் செய்துள்ளது, எப்படியிருந்தாலும் சவுதி அரேபியாவுக்கு இது அதிகப்படியான லாபம்.

இந்தியா - ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..! இந்தியா - ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia doubles Russian oil imports in june quarter; Shocks USA, UK, Europe

Saudi Arabia doubles Russian oil imports in june quarter; Shocks USA, UK, Europe ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X