கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக இருக்கும் சவுதி அரேபியா சில மாதங்களுக்கு முன்பு எண்ணெய் விலையை உயர்த்தி அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பார்க்கும் திட்டதுடன் தானாக முன்வந்து ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் பேரல் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்தது.
இந்த உற்பத்தி குறைப்பை சவுதி அரேபியா ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டுமே அறிவித்திருந்த நிலையில் வியாழக்கிழமை அடுத்த ஒரு மாதத்திற்கு அதாவது செப்டம்பர் மாதத்திற்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த ஒரு மில்லியன் பேரல் உற்பத்தியை குறைப்பு தொடரவும் வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளுக்கு சுமார் 9 மில்லியன் பேரலாக இருக்கும் என்று சவுதி எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு அறிவித்துள்ளது அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் SPA.
OPEC + நாடுகள் அறிவித்துள்ள இந்த கூடுதல் தன்னார்வ உற்பத்தி குறைப்பு அறிவிப்புகள் எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறப்படுகிரது. ஆனால் இந்த உற்பத்தி குறைப்பால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது என்பது தான் முக்கியமான விஷயம்.

இந்த நிலையில் சவுதி அரேபிய அரசின் வியாழக்கிழமை அறிவிப்பில் ஒரு நாளுக்கு 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைத்துள்ள நடவடிக்கை தொடர்ந்து நீட்டப்படலாம், அல்லது நீட்டிக்கப்பட்டும் அதிகரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
செப்டம்பர் மாதம் ரஷ்யாவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை 300,000 பேரல் குறைக்கும் என்று சவூதியின் அறிவிப்புக்குப் பின் ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறியுள்ளார். இது இந்தியாவை கூடுதலாக பாதிக்கும், இதன் மூலம் இந்தியா மீண்டும் சவுதி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தனது கொள்முதல்-ஐ அதிகரிக்க துவங்கும் நிலைக்கு தள்ளும்
சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை-ஐ கட்டியாளும் OPEC+ அமைப்பின் ஜூன் மாத உற்பத்தி கொள்கை கூட்டத்தில் 2024 க்குள் எண்ணெய் கட்டுப்படுத்த ஒரு பரந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் படிப்படியாக சவுதி, ரஷ்யா தனது உற்பத்தியை குறைத்து வருகிறது.

OPEC மற்றும் ரஷ்யா தலைமையிலான நட்பு நாடுகளை உள்ளடக்கிய OPEC+ அமைப்புகளின் முக்கிய கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது. OPEC+ அமைப்பில் இருக்கும் நாடுகள் தான் சர்வதேச சந்தையில் சுமார் 40 சதவீத கச்சா எண்ணெய் சப்ளையை செய்கிறது, இப்படியிருக்கையில் 2022 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டு சப்ளை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதற்கான சிறிய நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. இன்று அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.25 சதவீதம் உயர்ந்து 81.75 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவீதம் அதிகரித்து 85.27 டாலராகவும், OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 0.07 சதவீதம் அதிகரித்து 86.66 டாலராக உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications