உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே மொத்தமும் விற்பனையானது.
உலக நாடுகள் என்னதான் சோலார் மின்சாரம், எலக்ட்ரிக் வாகனம் என கூறினாலும், கச்சா எண்ணெய் இல்லாமல் உலக நாடுகள் இயங்க முடியாது என்பதற்குச் சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் பங்கு விற்பனையும், அதற்கு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வமும் தான் சாட்சி

சவுதி அரேபியா அரசு கச்சா எண்ணெய் மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில், பல புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. இதில் சுற்றுலா துறை முதல் விளையாட்டு, வர்த்தகம், சர்வதேச முதலீடுகள் என பல துறைகளும், சேவைகளும் அடக்கம்.
சவுதி அரேபியா அரசு தனது பொருளாதாரம் கச்சா எண்ணெய் மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில், பல புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. இதில் சுற்றுலா துறை முதல் விளையாட்டு, வர்த்தகம், சர்வதேச முதலீடுகள் என பல துறைகளும், சேவைகளும் அடக்கம்.
இது தவிரச் சவுதி அரேபிய அரசு பல பிரம்மாண்ட கட்டுமான திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது, இப்படி பல முக்கியமான திட்டங்களுக்காக ஆராம்கோ நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து 12 பில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியுள்ளது.
சவுதி அரேபியா அரசு, ஆராம்கோ நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்து பங்குகளுக்கும் முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர். ஒரு பங்கின் விலை 26.70 ரியால்கள் முதல் 29 ரியால்கள் வரை நிர்ணயிக்கப்பட்டு இந்த விற்பனை நடந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பது இப்போது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கலவையான பங்களிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2019 ஆம் ஆண்டு சர்வதேச பங்குச்சந்தையில் அரேம்கோ பங்குகள் முதன் முதலில் பட்டியலிடப்பட்ட போது, 29.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளின் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதில் சுமார் 106 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளுக்கு ஆர்டர்கள் கிடைத்தன, அதாவது கிட்டத்தட்ட 4 மடங்கிற்கு ஆர்டர் குவிந்தது. மேலும், விற்பனை செய்யப்பட்ட பங்குகளில் சுமார் 23% வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை அன்று அரேம்கோ பங்குகளின் விலை 2.9% வரை குறைந்து 28.30 ரியால்களாக வர்த்தகப்பட்டது. இதன் மூலம், இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 1.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுதி அரசு அரேம்கோ பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டதிலிருந்து, இந்த பங்குகளின் விலை சுமார் 14% வரை குறைந்துள்ளது. தற்போது, இந்த பங்குகள் ஒரு வருடத்திற்கும் மேலாக மிகக் குறைந்த விலையில் வர்த்தகமாகி வருகின்றன.
இதற்கு முக்கியமான காரணம் சவுதி ஆராம்கோ OPEC+ அமைப்புடன் சேர்ந்து அதன் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து விற்கும் காரணத்தால் வர்த்தகம், வருமானம், லாப அளவீடுகள் சரிந்து பங்கு விலை மோசமான நிலையில் உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications