சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கனசதுர வடிவமைப்பில் தி முகாப் என்ற பெயரில் 400 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடம் ஆனது கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் உலகிலேயே மிகப்பெரிய ஒரு கட்டிடமாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் 2 மில்லியன் சதுர மீட்டர்கள் தள பரப்புடன் இந்த கட்டிடமானது கட்டப்படுகிறது.
நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை போட 20 மடங்கு பெரிய கட்டிடமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த முகாப் கட்டிடத்தை கட்டுவதற்காக 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரியாதில் நியூ முராபா என்ற பெயரில் ஒரு நவீன நகரம் கட்டப்பட்டு வருகிறது. நவீன தேவைகளுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட நகரமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நகரத்தின் மையப் பகுதியில் தான் இந்த தி முகாப் கட்டிடம் அமைய இருக்கிறது.
இந்த நியூ முராபா நகரத்தினை பொருத்தவரை 1,04,000 .வீடுகள் இதனுள் அமைந்திருக்கும் இந்த வீடுகளுக்கு தேவையான ரீடெய்ல் கடைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான இடமாக இந்த கட்டிடம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
சவுதி அரேபியாவின் நியூ முராபா டெவலப்மென்ட் கம்பெனி என்று நிறுவனம் இந்த முகாப் கட்டிடத்தை கட்டுகிறது. கன சதுர வடிவத்திலான கட்டிடங்கள் என்பது உலக அளவில் மிகவும் அரிதாக கட்டப்படுபவை. சவுதி அரேபியாவை பொருத்தவரை புது வகையான கட்டிடங்களுக்கு பெயர் போன ஒரு நாடாகும்.
ஏற்கனவே இங்கு ஜெட்டா டவர் அமைந்துள்ளது. இது உலகின் உயரமான கட்டிடமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் பாதி கட்டிய பிறகு இதன் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது சவுதி அரேபியா மேலும் ஒரு கட்டுமான பணியை தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான காணொளியை சவுதி அரசு வெளியிட்டுள்ளது.
இதில் முகாப் திட்டமானது, 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது. இதில் அருங்காட்சியகம், தியேட்டர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு இடம்பெறும் என காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications