சவூதி அரேபிய நாட்டின் விமான நிறுவனங்களான சவுதியா ஏர்லைன்ஸ் அல்லது ஃப்ளைனாஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, சவுதி நாட்டில் நிறுத்தத்துடன் கூடிய புதிய டிரான்சிட் விசாவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் இதே வேளையில் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலா துறை, ரீடைல் வர்த்த்கம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற முடிவில் இந்தப் புதிய டிரான்சிட் விசா அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த விசா யாருக்கெல்லாம் பயன்படும்..? இதன் மூலம் மக்களுக்கு எந்த விதத்தில் பலன் அளிக்கும்..?
சவூதி அரேபிய
சவூதி அரேபிய அரசு சவுதியா ஏர்லைன்ஸ் அல்லது Flynas விமானத்தில் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு, சவுதி அரேபிய நாட்டில் ஸ்டாப்ஓவர் வசதி உடன் கூடிய புதிய டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்துள்ளது.
டிரான்சிட் விசா
இப்புதிய டிரான்சிட் விசா மூன்று மாதங்கள் செல்லுபடியாகும், இதேபோல் இதைச் சவுதி அரேபிய அரசு இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்பே ஓருவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
96 மணிநேரம்
இப்புதிய டிரான்சிட் விசா மூலம் சவூதி அரேபியாவில் சுமார் 96 மணிநேரம் அதாவது நான்கு நாட்கள் தங்கி உம்ரா செய்ய, நபிகள் நாயகம் மசூதிக்குச் செல்ல அல்லது சுற்றுலா தளங்களுக்குச் செல்ல இந்த விசா அனுமதிக்கிறது.
சவூதி வெளியுறவு அமைச்சகம்
இதற்கான அறிவிப்பை ஜனவரி 30ஆம் தேதி சவூதி அரேபிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் இந்தச் சேவை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், சவுதியா ஏர்லைன்ஸ் அல்லது ஃப்ளைனாஸின் இணையதளங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் உறுதிப்படுத்தியது.
ஆட்டோமேட்டிங் விசா
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் MOFA தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தேசிய விசா தளத்திற்குத் தானாகவே அனுப்பப்படும், இதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்-க்கு டிஜிட்டல் விசா உடனடியாக ஒப்புதல் அளித்து வழங்கப்படும். ஒப்புதல் பெற்ற உடன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்-க்கு அனுப்பப்படும்.
4 நாள் இலவச விசா
இந்தப் புதிய திட்டம் சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக வெளியாகியுள்ளது. இதேபோல் அந்நாட்டின் பொருளாதாரத்திற்குச் சுற்றுலா துறை முக்கியப் பங்கு விகிக்கும் காரணத்தால் உலகளவில் சுற்றுலா பணிகளை ஈர்க்க இந்த 4 நாள் இலவச விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
முதலீடு
இத்தகையைத் திட்டம் மூலம் சவுதி அரேபிய அரசு 2023க்குள் அந்நாட்டுச் சுற்றுலா துறையில் மட்டும் சுமார் 220 பில்லியன் சவுதி ரியால் முதலீட்டை பெறவும், 2030க்குள் 500 பில்லியன் சவுதி ரியால் அளவிலான முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது எனச் சவுதி நாட்டின் சுற்றுலா துறை அமைச்சகம்.
ரஷ்யா
சமீபத்தில் ரஷ்யா வெளிநாட்டினரையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்க பல தளர்வுகள் உடன் புதிய கோல்டன் விசா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விசா குறிப்பாக இந்தியர்களையும், இந்திய முதலீட்டாளர்களையும் ஈர்க்க அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications