Pakistan Gold Mine: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் தவித்துக்கொண்டு இருக்கும் வேளையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற நாடுகளின் நிதி உதவியைப் பெற்று தனது பொருளாதாரத்தை காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு தங்க முட்டையிடும் வாத்து ஒன்று கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பலுச்சிஸ்தான் பகுதியில் தங்கம் நிறைந்த ஒரு சுரங்கம் கண்டறியப்பட்டு இருக்கும் வேளையில், இதை வைத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. Balochistan பகுதியில் இருக்கும் சுரங்கத்தின் பெயர் Reko Diq. சுரங்கத்தில் இருக்கும் தங்கத்தை வெட்டி எடுத்து சந்தைக்குக் கொண்டு வருவதில் பெரும் செலவினம் உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரும் சக்தி இந்த தங்கச் சுரங்கத்திற்கு இருப்பதாகக் கூறப்படும் வேளையில், இந்த சுரங்கத்திற்கான செலவுகளை ஈடுகட்டக் குறிப்பிடத்தக்கப் பங்குகளைப் பாகிஸ்தான் நாட்டின் நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் அரசு, ரெக்கோ டிக் சுரங்க திட்டத்தில் 15% பங்கை சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்யப் பரிசீலித்து வருகிறது. இதற்காகச் சவுதி பொது முதலீட்டு பண்ட் (PIF) இந்த பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது மற்றும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதியுதவியும் செய்ய முன்வந்துள்ளது.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் வெளியிட்டுள்ள தகவல் படி, பாகிஸ்தான் அரசு தற்போது சவுதி PIF நிறுவனம் முன்வைத்துள்ள திட்டத்தை ஆய்வு செய்யத் தனியாக ஒரு குழுவை அமைத்து வருகிறது. இந்த குழு பாகிஸ்தான் அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும், இதைத் தொடர்ந்து 15 சதவீத பங்குகளின் விலையை நிர்ணயம் செய்யும் பேச்சுவார்த்தை நடத்தும்.
ரெக்கோ டிக் சுரங்கம் கூட்டணியில் இயங்கி வருகிறது. இதில் 50% பங்கு பேரிக் கோல்டு (Barrick Gold) மற்றும் மீதமுள்ள பங்கு பாகிஸ்தான் மற்றும் பலுச்சிஸ்தான் அரசு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.
பலுச்சிஸ்தானின் சகாய் (Chagai ) மாவட்டத்தில் அமைந்துள்ள ரெக்கோ டிக் சுரங்கம் உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் செம்பு சுரங்கங்களில் ஒன்றாகும்.
1995 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அதிகளவிலான தங்கம் மற்றும் செம்பு தாது இருப்பது உலகிற்குத் தெரிய வந்தது. நிபுணர்களின் கணிப்புகளின் படி இங்குத் தோராயமாக 400 மில்லியன் டன் தங்கத்தைக் கொண்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது, இதன் மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications