சவுதி அரேபியா, ஆசியா, ஐரோப்பியா உள்ளிட்ட பகுதிகளில் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டும் வகையில், இப்பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா ஏற்றுமதி பொருட்களுக்கான விலையை உயர்த்த உள்ளதாக தெரிகிறது.
சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்ந்து கச்சா எண்ணெய் தேவைக்கு வழிவகுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்கு மேலாக இருந்து குறைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அந்த லெவலை எட்டலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
குறிப்பாக சீனாவின் பொருளாதாரம் ஏற்றம் கண்டு வரும் நிலையில், எரிபொருள் தேவைக்கு வழிவகுக்கலாம். இதனால் எரிபொருள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து முக்கிய பொருளாதார நாடுகளும் தற்போது ஏற்றத்திற்கு திரும்பி வரும் நிலையில், பணவீக்கம் என்பது பெரும் தடையாக இருந்து வருகின்றது.
தாக்கம் இருக்கலாம்
எனினும் பணவீக்கத்தினை குறைக்க பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுவும் மேற்கொண்டு ஆதரவாக அமையலாம். ஆசிய நாடுகளுக்கு பெரும் அளவில் எரிப்பொருள் சப்ளையில் முக்கிய பங்கு வகிப்பது சவுதி அராம்கோ தான், ஆக ஏப்ரல் மாதத்தில் இருந்து விலை அதிகரிப்பதாக கூறியிருப்பது, மேற்கொண்டு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஆசிய நாடுகளில் தாக்கம் இருக்கலாம்
கச்சா எண்ணெய் சப்ளையில் ஆசிய நாடுகள் பெரும் வாடிக்கையாளர்களாக இருந்து வரும் நிலையில், இது ஆசிய நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்து வரும் நிலையில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இதேபோல வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் விலையை உயர்த்தியுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்து, அண்டை நாடுகளிடம் வாங்க திட்டமிட்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த விலையேற்றம் மேற்கோண்டு அங்கும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதற்கிடையில் இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 1% குறைந்து, பேரலுக்கு 85 டாலர்களாக காணப்படுகின்றது. இது 2022 நடுப்பகுதியில் சுமார் 115 டாலர்களாக காணப்பட்டது. இது பொருளாதார வளர்ச்சி சுருங்க சுருங்க வளர்ச்சியும் சுருங்கியது.
இதுவும் ஒரு முக்கிய காரணம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இருந்து வரும் சூழலில் இது சப்ளையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவில் வலுவான தேவையானது காணப்படும் நிலையில், ஐரோப்பா அமெரிக்காவிலும் கூட தேவை அதிகம் இருந்து வருவதாக அராம்கோவின் தலைவர் அமின் நாசர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி அதிகரிக்க திட்டமில்லை
சர்வதேச அளவில் சவுதி அரேபியா மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகும். ஓபெக் நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் சவுதி, அடுத்த ஆண்டு வரையில் உற்பத்தியினை அதிகரிக்கவும் திட்டமிடப்படவில்லை என தெரிவித்துள்ளது. ஆக இது மேற்கொண்டு விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
பெரும்பகுதி இறக்குமதி
அராம்கோ ஏற்றுமதி செய்யும் எண்ணெய்-யில் 60% என்பது ஆசிய நாடுகளுக்கு தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. இவற்றில் பலவும் நீண்டகால ஒப்பந்தங்களாக உள்ளன. எனினும் விலை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படுகின்றது. அராம்கோவிடம் வாங்கும் நாடுகளில் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். ஆசியா சவுதியின் இந்த முடிவால் இந்தியா போன்ற முக்கிய இறக்குமதி நாடுகளில் விலையை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
அதோடு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவை தவிர்த்து மற்ற விற்பனையாளர்களை நாடி வரும் நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications