அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருக்கும் இதேவேளையில் ஹவுதி அமைப்புகள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ஹவுதிக்கள் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷைபா எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் தஹ்ரான் நகரில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ தலைமையகத்தை வியாழக்கிழமை தற்காலிகமாகக் காலி செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சவுதி ஆரம்கோ ஊழியர்களை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபிய மக்கள் மத்தியில் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே ஹவுதி படைகள் ஆராம்கோ தலைமையகத்தைத் தாக்கியிருக்கும் நிலையில் நேற்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது, அதன் பின்பு அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்தை விட்டு வெளியேறச் சொல்லிய நிர்வாகம் வொர்க் ஃபரம் ஹோம் கொடுத்துள்ளது. ஆனால் இதற்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் ஹவுதிக்கள் ஆராம்கோ தலைமை அலுவலகத்தில் நடத்திய தாக்குதலில் 3 தளங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இத்தாக்குதலில் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அதேபோல் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதன் பின்பு ஹவுதிக்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையம், எண்ணெய் கட்டமைப்பு என அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று காலையில் 6.30 மணியளவில் சவுதி அரேபியா பாதுகாப்பு அமைச்சகம் நஜ்ரான் மாகாணத்தில் இருக்கும் மக்களுக்கு அவசரக்கால எச்சரிக்கையை விடுத்தது. பொதுவாக ஏவுகணை தாக்குதல் நடக்கும் அச்சம் இருந்தால் இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த நிலையில் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரத்தில் திரும்பப் பெற்றது.
மேலும் இந்த எச்சரிக்கையில் நஜ்ரான் மாகாணத்தில் இருக்கும் மக்கள் ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கூடுவதோ அல்லது புகைப்படம், வீடியோ எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இத்தாலி உட்பட பல நாடுகள் சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவுக்குச் செல்ல திட்டமிடுவோர் தங்களுடைய பயணத்தைத் தள்ளி வைக்கவும், சவுதி அரேபியா விமான நிலையத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் உத்தரவிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
