உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ, தெற்காசிய நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் தற்போது அதிகப்படியான உற்பத்தியும், ஏற்றுமதியும் துவங்கியுள்ள காரணத்தால் கச்சா எண்ணெய்-க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சவுதி அராம்கோ இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை தேடுவதாகவும், எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அராம்கோ இந்தியாவில் முதலீடு செய்கிறது என்றால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் O2C பிரிவில் சவுதி ஆராம்கோ முதலீடு பெறவதற்காக பல நிர்வாக மாற்றங்களை முகேஷ் அம்பானி செய்தார். கடந்த முறை பேச்சுவார்த்தையில் சவுதி ஆராம்கோ 20 முதல் 25 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் தோல்வியில் முடிந்தது.
இந்தியாவுக்கு முக்கிய கச்சா எண்ணெய் சப்ளையராக இருக்கும் சவுதி அரேபியா இந்தியாவில் முதலீடு செய்தால் புதிய சுத்திகரிப்பு தளத்தை உருவாக்கும் அல்லது இந்தியாவில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலைகள் உடன் கூட்டணி சேர்ந்து சுத்திகரிப்பு தளத்தை விரிவாக்கம் செய்யும். காரணம் சீனாவிலும் சவுதி ஆராம்கோ இதையே தான் செய்தது.
இந்த பார்மூலா-வை இந்தியாவில் சவுதி ஆராம்கோ பயன்படுத்தினால் இந்தியாவில் அமைக்கும் தனது சத்திகரிப்பு ஆலையில் தனது சொந்த கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்து இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்து பெரிய வர்த்தகத்தையும், லாபத்தையும் பார்க்கும்.
இந்த முறையாவாது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சவுதி ஆராம்கோ முதலீட்டை பெறுமா..? இந்த செய்தி வெளியானதை அடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 6 மாத உயர்வை எட்டியுள்ளது, இன்று அதிகப்படியாக 2,644.30 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. ரிலையன்ஸ் -ன் 52 வார உயர்வு 2,754.70 ரூபாய்.
சர்வதேச கச்சா இறக்குமதியைப் பொறுத்தவரையில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகள் தான் பெரியது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய கச்சா எண்ணெய் இறக்குமதி நிலைகளை தாண்டிவிட்டன. இதனால் தெற்காசிய நாடுகளின் வர்த்தகத்திற்காக இந்தியாலில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக புதன்கிழமை வியன்னா நகரத்தில் நடந்த OPEC சர்வதேச கூட்டதில் பேசியபோது சவுதி ஆராம்கோ தலைவர் அமின் நாசர் கூறினார்.
சவுதி ஆராம்கோ மார்ச் மாதத்தில், சீனாவில் அதன் சுத்திகரிப்பு அளவை அதிகரிக்க சீனாவின் ரோங்ஷெங் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை 3.6 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியது. டிசம்பர் 2022ல் saudi Aramco - சீனா பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் இணைந்து சீனாவில் ஒரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆலையை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ 2018ல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் உடன் இணைந்து சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க முயற்சி செய்தது.
இந்திய சந்தை மீது தீரா ஆசை கொண்ட ஆராம்கோ 44 பில்லியன் டாலர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் முகேஷ் அம்பானி இந்த வாய்ப்பை பெற வேண்டும் எனத் திட்டமிட்டு, ஆராம்கோ நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் முதலீடு செய்ய அழைத்தார். ஆராம்கோ - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்தாலும் கடைசியில் தோல்வியில் முடிந்தது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications