உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமாக இருக்கும் சவுதி அரேபியாவின் ஆராம்கோ, யெமன் நாட்டின் ஹவுதி படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கு முன்பு சவுதி எல்லைப் பகுதியில் இருக்கும் துறைமுகம், பைப்லைன், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக அடுத்தடுத்து முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இதனால் முகமது பின் சல்மான் தலைமையிலான சவுதி அரேபியா பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.

கடந்த வாரம் ஹவுதி படையினர் சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆராம்கோ நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியான தஹ்ரானில் இருக்கும் ஆராம்கோ நிறுவனத்தின் நிர்வாக கட்டிடத்தின் மீது செய்த ஹவுதி படையினர் செய்த தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இது ஆராம்கோவின் தலைமையகம் வெறும் நிர்வாக அலுவலகம் என்பதால் இரவு நேரத்தில் யாரும் இல்லாத நிலையில் உயிர் தேசம் இல்லை.
இந்த தாக்குதல் மூலம் யாருக்கும் காயமோ அல்லது மரணமோ ஏற்படவில்லை என சவுத அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
இதே செவ்வாய்க்கிழமை இரவு சவுதியின் தெற்கு பகுதியில் இருக்கும் அல் கார்ஜ் பகுதியை நோக்கி வந்த ஏவுகணையை வானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.
Al-Kharj என்பது சவுதி அரேபியாவின் டெய்ரி கேப்பிடலாகும், மேலும் இங்கு இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீர் வைத்து விவசாயம் செய்யப்படுகிறது. Al-Kharj பகுதியில் இருந்து தான் சவுதி அரேபியாவுக்கான 65 சதவீத பால் சப்ளை பூர்த்தி செய்யப்படுகிறது, இதேபோல் 26 சதவீத காய்கறிகள் சப்ளை செய்யப்படுகிறது.
ஹவுதி படைகள் கடந்த 2 வாரத்தில் சவுதி அரேபியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் தாக்குதலை விரிவாக்கம் செய்துள்ளது, இதற்கு முன்பு மேற்கு பகுதியில் மட்டுமே தாக்குதலை எதிர்கொண்ட சவுதி தற்போது தலைநகர் ரியாத்தில் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
நேற்றைய தாக்குதலில் மட்டும் ரியாத்தில் சுமார் 4 பேர் இறந்துள்ளனர், 15 வீடுகள் சேதமாகியுள்ளது.
ஹவுதி படைகள் மீது தாக்குதல் நடத்த அனைத்து உதவிகளையும் சவுதி அரேபியாவுக்குச் செய்ய இஸ்ரேல் தயார் என அறிவித்தும், சவுதி இளவரசர் பாலஸ்தீன விவகாரத்தை முக்கியமானதாகக் கருதி மறுப்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

