இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய், 11 ரூபாய் குறைக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் வேளையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான சாத்திய கூறுகள் தொடர்ந்து உருவாகியுள்ளது. இதில் புதிதாகச் சவுதி அரேபியாவின் ஆராம்கோ திட்டம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி அராம்கோ தனது எண்ணெய் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 13 மில்லியன் பேரல் உயர்த்தும் திட்டத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

தினசரி உற்பத்தி அளவீட்டு இலக்கை 12 மில்லியன் பேரலாக நிர்ணயம் செய்துகொள்ள உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. இதன் மூலம் எதிர்கால எண்ணெய் தேவை குறித்துச் சவுதி அரேபியாவின் கணிப்பு இத்துறை முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி ஆராம்கோ, சீனாவிலும் இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால், 2027 ஆம் ஆண்டளவில் அதன் உற்பத்தித் திறனை அதிக அளவில் உயர்த்த பல பில்லியன் டாலர்களைச் செலவிடுவதாகக் கூறியது.
ஆனால் சில மாதங்களிலேயே தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. சவூதி அரேபியா தற்போது ஒரு நாளைக்குச் சுமார் 9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையைக் கட்டுக்குள் வைக்கவும், உபரி கச்சா எண்ணெய் வரவை தடுக்கவும் OPEC+ நாடுகள் உடன் இணைந்து அதன் உற்பத்தியைப் பெரிய அளவில் குறைத்தது சவுதி அரேபியா.
கச்சா எண்ணெய்யைச் சவுதி அரேபியா தனது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வைத்திருக்கும் வேளையில், தற்போது இயற்கை எரிவாயு, கெமிக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்கப் பொருட்கள் போன்ற பிற வணிகங்களை விரிவுபடுத்தி வருகிறது.
சவூதி அரேபியா தனது நிதியை இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்கப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு, ஆராம்கோ-வின் உற்பத்தி இலக்கை 13 மில்லியன் பேரலில் இருந்து 12 மில்லியன் பேரலாகக் குறைக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கடலில் டிராஃபிகுரா என்னும் சிங்கப்பூர் நிறுவனத்தால் இயக்கப்படும் எரிபொருள் டேங்கர் கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை கொண்டு தாக்கியதால் எரிபொருள் சப்ளை பாதிப்பு அச்சங்கள் அதிகரித்துள்ள காரணமாகக் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 1% உயர்ந்தது.
இதேவேளையில் ரஷ்யாவில் நடந்த ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு அந்நாட்டில் பல சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் பெட்ரோல் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் அடுத்த சில வாரங்களுக்குக் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இல்லை என்பது தெரிகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications