உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா-வின் அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் முதலீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக Saudi Aramco-வின் மூத்த நிர்வாகி புதன்கிழமை தெரிவித்தார்.
இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் டூ கெமிக்கல் பிரிவில் பெரும் தொகையை முதலீடு செய்யப் பல மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுத் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பின்பு சவுதி ஆராம்கோ மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்துப் பேச துவங்கியுள்ளது மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காட்டில் மழை பெய்யுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
கோவாவில் நடந்த இந்தியா எனர்ஜி வீக் நிகழ்ச்சியில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் டவுன்ஸ்ட்ரீம், ரசாயனங்கள் மேம்பாட்டிற்கான திரவங்களுக்கான மூத்த துணைத் தலைவர் பைசல் ஃபக்கீர் பேசுகையில் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வரும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தத் திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறது எனபதை தெரிவிக்கவில்லை
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரும் OPEC பிரிவின் கிங்மேக்கராக இருக்கும் சவுதி அரேபியா ஆசியா முழுவதும் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் பிரிவில் தனது முதலீடுகளை அதிகரித்தது. இந்த முதலீடு வாயிலாக அதன் கச்சா எண்ணெய்க்கான புதிய சந்தைகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உள்ளது.
2018 ஆம் ஆண்டில், சவுதி அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மேற்கு மகாராஷ்டிராவில் ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் பேரல் (பிபிடி) கடலோர சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையை அமைக்க இந்திய அரசு நிறுவனங்களின் கூட்டமைப்பில் இணைந்தன, ஆனால் திட்டம் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் பல தடைகளை எதிர்கொண்டது.
சவூதி அரேபியா கடந்த ஆண்டு OPEC மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்த பின்னர், சுமார் 9 மில்லியன் bpd ஐ பம்ப் செய்து வருகிறது, அதன் தற்போதைய திறனான 12 மில்லியன் bpd க்கும் குறைவாக உள்ளது.


Click it and Unblock the Notifications